 |
|
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கும்பலால் கொடூரமாக
பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மாணவிக்கு
நீதி கேட்டும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கோரியும் நாடு முழுவதும்
போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெ
ல்லி சம்பவத்தின் சுவடு மறையும் முன்னரே
ஆங்காங்கே பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கொல்கத்தாவில்
சில்மிஷம் செய்த வாலிபர்களிடம் இருந்து தப்பிக்க பஸ்சிலிருந்து மாணவி கீழே குதித்த
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தாவின் ராஜா பஜார் அறிவியல்
கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ரீது (பெயர்
மாற்றப்பட்டுள்ளது). நேற்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக எஸ்பிளனேடு பகுதியில்
இருந்து பஸ்சில் ஏறினார். பஸ்சில் இருந்த 4 வாலிபர்கள் ரீதுவை பார்த்து ஆபாசமாக பேச
தொடங்கினர். பின்னர் அவர் அருகில் வந்து சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனால்
பயந்து போன அவர் ஓடும் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார். அப்போது அவரது சட்டையை
பிடித்து வாலிபர்கள் இழுத்தனர். இருப்பினும் அவர்களிடம் இருந்து விடுபட்டு ஓடும்
பஸ்சில் இருந்து ரீது கீழே குதித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் கல்லூரிக்கு சென்ற ரீது மயங்கி விழுந்தார். இதனால் மாணவிகள்
அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து விழித்தார். தனக்கு
நேர்ந்த கொடுமையை தோழிகளிடம் தெரிவித்தார். இந்த தகவல் கல்லூரி முழுவதும் பரவியது.
இதையடுத்து ஆச்சார்யா பிரபுல்லா சந்திரா சாலையில் மாணவமாணவிகள் மறியலில்
ஈடுபட்டனர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் போலீசார் வந்து
பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் அதிகாரிகள்
உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையில் போலீசார் ரீது
வீட்டுக்கு சென்று அவரிடம் புகார் பெற முயன்றனர். ஆனால், ரீது தந்தை அதற்கு மறுத்து
விட்டார். ஆனால் கல்லூரி செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.viyapu. thanks
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக