
துலே(மஹராஷ்ட்ரா):மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில்
நிகழ்ந்த வகுப்பு கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
போலீஸ் உடபட 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மும்பையில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள
துலேயில் நிகழ்ந்த வகுப்பு கலவரத்தில் நேற்று முன் தினம் 3 பேர் பலியானார்கள்.
இம்ரான் அலி (வயது 20), அஸீம் ஷேக் (வயது 25), ஸயீத் அஹ்மத் (வயது 23) ஆகியோர்
மரணமடைந்தனர். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கடுமையாக காயமடைந்த ஒருவர் நேற்று காலை
மரணமடைந்தார். காயமடைந்த 50க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் உள்பட 200 க்கும்
மேற்பட்ட நபர்கள் மருத்துவமனைகளில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
காயமடைந்தவர்களில் போலீஸ் எஸ்.ஐயும், ஏ.எஸ்.ஐயும்
அடங்குவர். ஒரு பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர் நடத்தும்
ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். சாப்பிட்டு முடித்ததும் அதற்கான பணத்தை அவர்கள்
கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த 4 பேரையும் ஹோட்டல் ஊழியர்கள்
தாக்கியுள்ளனர்.
அடிவாங்கியவர்கள் சிறிது நேரத்தில் பெரிய
கும்பலுடன் வந்துள்ளனர். இதுவே பின்னர் பெரிய மோதலாக வெடித்து, 4 பேர் உயிரிழக்க
காரணமாக அமைந்தது. இந்த மோதலில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாரும் காயமடைந்தனர்.
துலே நகரத்தில் மச்சிபுராவில் துவங்கிய கலவரத்தில்
மாதவ்புராவிற்கும் இதர பகுதிகளுக்கும் பரவியது. இரு பிரிவினர் இடையே நிகழ்ந்த
மோதலில் போலீசார் மீது ஒரு கும்பல் கல்வீசியது. இதைதொடர்ந்து போலீஸார் நடத்திய
துப்பாக்கிச் சூட்டில், 18 வயது இளைஞர் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். சம்பவம்
தொடராமல் இருக்க, துலே நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஊரடங்கு திங்கள்கிழமையும் நீடித்தது. அதேசமயம்,
நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மோதலின் போது
சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல்
தடுத்ததாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது, துலே போலீஸார் வழக்குப் பதிவு
செய்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள
பலருக்கும் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில் இறந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே மரணத்திற்கான காரணம்
தெரியவரும். ஆனால், அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டது போலீசாரின்
துப்பாக்கிச்சூட்டில் தான் என்று ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் கூறுகிறது
..thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக