puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 8 ஜனவரி, 2013

பள்ளிவாசல்கள்,தர்காக்கள் சிறப்புப்பணி மேற்கொள்வதற்காக, 3 கோடி ரூபாய் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு, மமக நன்றி


செவ்வாய்க்கிழமை, 08 ஜனவரி 2013 10:59
பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களின் பழுதுபார்ப்பு பணிகளுக்காக மேம்பாட்டு நிதி ஒன்றினை தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதற்காக ரூ 3 கோடிஅரசு மானியமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலமா ஓய்வூதியத்தினை 1,000 ரூபாயாக உயர்த்தியும், பயனாளிகள் எண்ணிக் கையை 2,600 ஆக உயர்த்தியும், வக்ஃப் வாரியத்தின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அரசு மானியத்தை 1 கோடி ரூபாயாக உயர்த்தியும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஓய்வூதியப் பலன்களை வழங்க சிறப்பு நிதியாக 3 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியும்,ஹஜ் குழுவிற்கு வழங்கும் மானியத்தை 20 லட்சமாக உயர்த்தியும், முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டார்.
தற்பொழுது பள்ளிவாசல்கள்,தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் பழுதுபார்ப்பு மற்றும் சிறப்புப்பணி மேற்கொள்வதற்காக,மாநில அளவில் வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி ஒன்றினை துவக்குவதற்கும்,இதற்கு தேவையான நிதியினை கொடையாளர்களிடமிருந்து பெறுவதற்கும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிதிக்கு அரசு மானியமாக 2012-13 ஆம் நிதியாண்டில் 3 கோடி ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்"
இந்த அறிவிப்புக்கு மனித நேய மக்கள் கட்சி நன்றி தெரிவித்துள்ளது

makkalmanasu thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக