மேலும்
உடல்கள் கிடைக்கின்றன. அந்த வகையில், இதுவரை கிடைத்துள்ள உடல்களின்,
(தீவிரவாதிகள், பணயக்கைதிகள் சேர்த்து மொத்தமாக) எண்ணிக்கை, 55 இலிருந்து, 81-க்கு
எகிறியுள்ளது என இன்று காலை அறிவிக்கப்பட்டது. இப்போது மற்றொரு குழப்பம்
ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையின் ஒதுக்குப் புறமான பகுதியில் கிடைத்துள்ள 25 உடல்கள்
யாருடையவை என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் உள்ளன.
காரணம்,
வெடிகுண்டு வெடித்த நிலையில் அந்த உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில்
சேதமடைந்துள்ளன. அல்ஜீரியாவின் தகவல் துறை அமைச்சர் முகம்மட் சையத், “தற்போது
கிடைத்துள்ள உடல்கள், பணயக் கைதிகளின் உடல்களாகவும் இருக்கலாம். தீவிரவாதிகளின்
உடல்களாகவும் இருக்கலாம். இரண்டும் கலந்த நிலையிலும் இருக்கலாம்”
என்கிறார்.
அத்துடன்
இப்பகுதியில் இந்த 25 பேரையும் பலிவாங்கிய குண்டுவெடிப்பு, தீவிரவாதிகளால் வெடிக்க
வைக்கப்பட்டதா, அல்லது அல்ஜீரிய ராணுவம் ஏவிய ஏவுகணை ஒன்றால் ஏற்பட்டதா என்பதுகூட
இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த 25 பேரும், இன்று காலை அறிவிக்கப்பட்ட
மொத்தம் 81 என்ற எண்ணிக்கையில் வருகிறதா, அல்லது இது தனியா என்பதுகூட தெளிவாக
இல்லை.
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக