puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 11 ஜனவரி, 2013

மட்டக்களப்பில் அடைமழை; 2'20'525 பேர் வெள்ளத்தால் பாதிப்பு!



on 11 January 2013.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 62'240 குடும்பங்களைச் சேர்ந்த 2'20'525 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டகளப்பு மாவட்டத்தில் நேற்று மாலை வரை வெள்ளத்தால் இடம்பெயர்ந்த 135 குடும்பங்களைச் சேர்ந்த 535 பேர்...,

5 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8'451 குடும்பங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிரம்படித்தீவு பலநோக்கு மண்டபம், பூவாக்காடு பாடசாலை மண்டபம், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வந்தாறுமூலை மகா வித்தியாலயம், கண்ணகி மகா வித்தியாலயம், பலாச்சோலை வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலேயே இம்மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது.


இதேவேளை, மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்திலுள்ள சாஹிரா பாடசாலை வெள்ளம் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எ.டேவிட் தெரிவித்தார். சாஹிரா பாடசாலைக்குள் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் வகுப்பறைகளிலிருந்து மாணவர்கள் கல்வி கற்கமுடியாத நிலைமை காணப்படுகின்றது.


இதனால் இப் பாடசாலை இன்றையதினம் மூடப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை இப்பாடசாலை மீண்டும் திறக்கப்படுமெனவும் அவர் கூறினார். மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை கல்வி கோட்டத்திலுள்ள 26 பாடசாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் இவற்றில் சில பாடசாலைகளுக்குள் வெள்ளநீர் தேங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக