
லண்டன்:சர்வதேச அளவில் பாதி அளவு உணவு
வீணாக்கப்படுகிறது. தேவையில்லை என்று நாம் ஒதுக்கும் உணவு200 கோடி டன் அளவு வரும்
என்று பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இன்ஸ்ட்யூசன் ஆஃப் மெக்கானிக்கல்
எஞ்சீனியரிங் தயாரித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொறுப்புணர்வில்லாத சேமிப்பு, விற்பனைக்கான
அதிகபட்ச கால அவகாசத்தை துல்லியமாக கடைப்பிடித்தல், உணவு சாப்பிட்ட பிறகு வரும்
மிச்சம் ஆகியவற்றை கணக்கிட்டு இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உலகில்
உற்பத்தியாகும் 400 கோடி டன் உணவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான உணவு ஒவ்வொரு
ஆண்டும் வீணாகிறது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதிகமான உணவு
வீணடிக்கப்படுகிறது. பாதி அளவு உணவு இங்கு வெளியே வீசப்படுகிறது
.thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக