பழைய வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகில் 'மின்ட் மாடர்ன்
சிட்டி' என்ற அடுக்குமாடி குடியிருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு அடுக்குமாடி
வீட்டின் 2-வது மாடியில் பஸ்ருல்லாகான் (68)இ அவரது மனைவி குர்ஷிதா (65) மகன்
முஸ்தாக் ஆகியோர் வசித்து வருகிறார்கள்.பஸ்ருல்லாகான் ஒரு தனியார் நிறுவனத்தில்
கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். முஸ்தாக் கால்சென்டரில் பணியாற்றுகிறார்.
நேற்று இரவு இவர் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் பெற்றோர் மட்டும் இருந்தனர்.
அவர்கள் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.இன்று அதிகாலை 5.15 மணிக்கு டீ
போடுவதற்காக பஸ்ருல்லாகான் எழுந்தார். அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு
வீடு முழுவதும் கியாஸ் பரவி இருந்தது. இது தெரியாமல் பஸ்ருல்லாகான் விளக்கை போட
முயன்றபோது தீப்பிளம்புடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. வீடு முழுவதும் தீப்பற்றி
எரிந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி நொறுங்கின. ஜன்னல் கதவுகளும்
பெயர்ந்து விழுந்தது. பேன் மற்றும் பொருட்களும் வளைந்து நெளிந்து போனது. அதில்
பஸ்ருல்லாகானும்இ அவரது மனைவி குர்ஷிதாவும் தீக்காயம் அடைந்தனர்.சிலிண்டர்
வெடித்தபோது அக்கம்பக்கத்து வீடுகளிலும் பலத்த சத்தம் ஏற்பட்டு வீடுகள் அதிரிந்தன.
அந்த வீடுகளில் இருந்த பொருட்களும் சிதறி விழுந்தன. ஜன்னல் கதவுகளும்
நொறுங்கின.அப்போது பஸ்ருல்லாகான் வீட்டின் பால்கனி இடிந்து கீழ் வீட்டின் மீது
விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தேன்மொழியான் (38)இ அவரது மகன்
கார்த்திக் (6) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி அதே இடத்தில்
பலியானார்கள். தேன்மொழியானின் மனைவி ஜோதி (34) மகன் அஜய்மேனன் (11) மகள் மதுமிதா
(8) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.உடனே அக்கம்பக்கம் இருந்தவர்கள் போலீசுக்கும்
தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து காயம்
அடைந்து கிடந்த 5 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர்.அங்கு பஸ்ருல்லாகான் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு 95 சதவீதம்
தீக்காயம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை
அளிக்கப்படுகிறது.
tamilantelevision. thanks
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக