- Monday, 14 January 2013 10:11

குடியரசு தலைவர் பிரதீபா படேலின் இறுதி ஆபிரிக்க பயணத்துக்கு ரூ.18 கோடி அரசு பயணம் செலவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
பதவியிலிருந்து விலகப் போகும் கடைசி மாதத்திலும் அவரது பயணத்திற்கு இவ்வளவு செலவழிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் செய்செல்ஸ் நாடுகளுக்கு சென்ற தனது கடைசி பயணத்துக்காகவே இவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை கமிஷன் மூலம் பெறப்பட்ட தகவல்களின் படி
2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதியிலிருந்து மே 8-ம் தேதி வரை, போயிங் 747-400 ரக தனியார் விமானத்துக்கான வாடகையாக ரூ.16 கோடியே 38 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க தலைநகரில் ரூ.1.46 கோடி செலவிடப்பட்டது. இதில் தங்கும் செலவினம் ரூ.71.82 லட்சம், உள்ளூர் போக்குவரத்து செலவு ரூ.52.33 லட்சம், சில்லரை செலவினங்கள் ரூ.22.12 லட்சம் ஆகும். டர்பனில் ரூ.23.55 லட்சம் செலவிடப்பட்டது. இதில் தங்கும் செலவினம் 18 லட்சம், உள்ளூர் போக்குவரத்து செலவு ரூ.5.27 லட்சம் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜுலை மாதம் 25-ம் தேதி வரை 5 ஆண்டுகள் இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்த பிரதீபா பாட்டீல் 12 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். உலகின் 22 நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் செய்த வகையில் ரூ.205 கோடி இந்திய அரசுக்கு செலவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக