18 ஆம் ஆண்டு Dubai Shopping
Festival (DSF 2013) நாளை முதல் (ஜனவரி 3)
ஆரம்பமாக உள்ளன.
இதில் சிறப்பு அம்சமாக
துபாய் சாலைகள் முழுவதும்
மின்விளக்குகளாள் அலங்கரிக்கப்பட்டு
இருக்கும்
துபாய்
ஷொப்பிங் விழாவில், "குளோபல் வில்லேஜ்" என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உலகக் கிராமம் ஒரு முக்கியமான அங்கமாகும். ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படுகின்ற பலவகையான உற்பத்திப் பொருட்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கே ஒரு சேரக் காட்சியளிக்கின்றன.
 ஒவ்வொரு ஆண்டும்,
முன்னைய ஆண்டிலும் அளவிலும்
தரத்திலும் வளர்ச்சியடைந்து செல்லும்.
ஓவ்வொரு ஆண்டும், இந்நாடுகள்
தங்கள் தங்கள் நாடுகளின்
கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில்,
புத்துப்புதுக் கருத்து வடிவங்களைக்
கொண்டு, இந்தத் தற்காலிகக்
கட்டிடங்களைக் கண்கொள்ளாக் காட்சியாகத்
தருகின்றன. 2003 ல், ராஜஸ்தான்
கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி
உருவாக்கப்பட்ட இந்தியக் காட்சியகம்,
சிறந்த காட்சியகமாகத்
தெரிவுசெய்யப்பட்டது.
இந்த விழா நடைபெறும்
ஒரு மாதகாலம் முழுதும்,
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும்,
வெளிநாடுகளிலிருந்தும் வந்து குவியும்
மக்களுக்கு இந்த உலகக்
கிராமம் ஒரு முக்கிய
இலக்காகும். இந்தியா, பாகிஸ்தான்,
சீனா, சிங்கப்பூர், எகிப்து,
சிரியா, தாய்லாந்து, லெபனான்
போன்ற நாடுகளின் காட்சியகங்களுக்குள்
மக்கள் கூட்டம் நிரம்பி
வழியும். அதுபோல வித்தியாசமான
கைப்பணிப் பொருட்களால் நிறைந்திருக்கும்
ஆபிரிக்க நாடுகளின் காட்சியகங்களும்
மக்களைப் பெருமளவில் கவர்கின்றன.
வானவெடிக்கைகள் மற்றும்
அதிஷ்ட குலுக்கள் பரிசு என்று
ஒரு மாதமும் விழா
கொண்டாட்டமாக இருக்கும்
makkalmanasu thanks
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக