- Saturday, 26 January 2013 11:56
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இறுதி கட்ட சோதனை நடத்துவதற்கு, இந்திய அணுச் சக்திக்கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து இந்திய ரஷ்ய பொறியியலாளர்கள் இணைந்து, 15 நாட்கள் சோதனை நடத்துவார்கள் என்றும் தெரிய வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் நிரப்பப்பட்ட நிலையிலும் மின் உற்பத்தி தாமதமாகி கொண்டே இருப்பதற்கு இறுதிகட்ட சோதனைகள் முடிவடையாததும் ஒரு காரணம் என்றும், இப்போது இறுதி கட்ட சோதனை செய்ய இந்திய அணுசக்திக் கழகம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதன் படி இறுதி கட்ட சோதனை 15 நாட்கள் நடைபெற உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோதனை ஹைடிரோடேஸ்ட் என்று சொல்லப்படும் நீர் சோதனை என்று தெரிகிறது. இதுபற்றி மேலும் வெளிவந்த தகவல்களின் படி கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவில், ஹைட்ரோ சோதனைகளை மீண்டும் நடத்துவதற்கு நேற்று அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
இந்த சோதனை 15 நாட்கள் நீடிக்கும் என்றும், சோதனையில் இந்திய அணுமின் கழக பொறியியலாளர்கள், ரஷ்ய நாட்டு வல்லுனர்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலையில் இறுதி கட்ட சோதனை நடத்துவார்கள்.
கொதி கலனில் தண்ணீர் நிரப்பி சூடாகி பல்வேறு சோதனைகள் நடத்தப்படும். மின் தடை ஏற்படும் போது தயார் நிலையில் இருப்பதற்கான சோதனைகளும் செய்யப்பட்டு, அனைத்து சாதனங்களுக்கும் சோதனைகள் செய்யப்படும் என்றும், இதன் பிறகே அடுத்த கட்ட செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், இந்த சோதனை 15 நாட்கள் இருக்கும் என்றும் அணுமின் நிலைய இயக்குனர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக