கர்நாடகா மாநிலம் மங்களூரில் 20 வயதான கல்லூரி மாணவி ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சாப்பிட்டவுடன் வயிற்று வலி மற்றும் வாந்தியுடன் அவதியுற்றுள்ளார்.
இந்த நிலையில் வலி அதிகமாகியுள்ளது. இதனை அடுத்து மங்களூரில் உள்ள இந்தியானா மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணின் வயிற்றில் சுமார் 1.5 கிலோ முடி இருந்துள்ளது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் முடி மூட்டையாக நீக்கப்பட்டது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ட்ரைக்கொஃப்கியா என்னும் வியாதி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வியாதி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கே பெரும்பாலும் ஏற்படும்.
மன உளைச்சல் மற்றும் பிரச்சனைகளின் போது நகத்தை கடித்து துப்புவது, மெல்வது போல முடியை கடிக்கும் பழக்கம் இந்த வியாதிகாரர்களுக்கு ஏற்படும். இது ஒருவித மன நோயாகும்.
பலர் முடியை பிடுங்கி அதன் நுனிபாகத்தை சாப்பிடுவார்கள். சிலர் இந்த பழக்கத்தை பெரிதும் ரசிப்பவர்களாகவே இருப்பார்கள். நாளடைவில் நோய் முற்றிய நிலையில் முடிகள் அனைத்தையும் பிடுங்கி தலை சொட்டையான சம்பவங்கள் கூட உலகின் சில பகுதிகளில் நிகழ்ந்துள்ளதாம். ட்ரைக்கொஃப்கியா 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
tamil.webdunia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக