puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 22 ஜனவரி, 2013

நிதி மோசடி செய்த பெண் முதலாளி மீது 100 வழக்குகள்

[ செவ்வாய்க்கிழமை, 22 சனவரி 2013, 05:12.14 பி.ப GMT ]
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பாதுகாப்பு ஆணையம் நேற்று, நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட டோரிஸ் நெல்சன்( Doris Nelson) என்பவரை வீட்டுச்சிறையில் வைத்துள்ளது. இவர் கனடா மற்றும் அமெரிக்காவில் எண்ணூறு முதலீட்டாளர்களிடம் இருந்து 135.4 மில்லியன் டொலர் கடனாக பெற்றுள்ளார். இத்தொகைக்கு 40 - 60 சதவீதம் வரை வட்டி வழங்குவதாக உறுதிமொழிப் பத்திரம் அளித்துள்ளார். ஆனால் அவ்வாறு வழங்காமல் தன்னிடம் பணம் ஏதுமில்லை என்று தற்போது (திவால் நோட்டீஸ்) அறிவிப்பு வெளியிட்டார்.
ஆணையாளர் மோசடியில் ஈடுபட்ட டோரிஸ் நெல்சன் மீது குற்றம் சுமத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். டோரிஸ் நெல்சன் "லிட்டில் லோன் ஷாப்பி" என்ற பெயரில் நிதிநிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். ஆரம்பத்தில் சிலருக்கு ஒழுங்காகப் பணத்தை வட்டியுடன் கொடுத்துவந்தார். இவர் தன்னிடம் வந்த தொகையைக் கடனாகவும் கொடுத்துவந்தார்.
கடன் வாங்கியவர்கள் முறையாகப் பணத்தைத் திரும்பிச் செலுத்தாததால் இவர் முதலீட்டாளருக்கு வாக்களித்தபடி வட்டி வழங்க முடியவில்லை. பிந்தைய முதலீடுகளை முந்தைய முதலீட்டாளருக்கு (2009) வட்டியாகக் கொடுத்துவந்தார். முதலீட்டாளர் வரவு குறைந்ததும் தான் வாக்களித்தபடி வட்டி வழங்க முடியாததால் "திவால் நோட்டீஸ்" கொடுத்துள்ளார்.
ஆணையாளர், நெல்சர் இதுவரை முதலீட்டாளருக்கு 118 மில்லியன் டொலர் கொடுத்திருப்பதாகக் கூறினார். 17.4 மில்லியன் டொலருக்கு கணக்கு எதுவும் காட்டாததால் அந்தத் தொகையை இவர் சொந்தச் செலவுக்குப் பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நெல்சன் இப்போது வாஷிங்ட்டனில் உள்ள கோல்பெர்ட்டில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இவர் கனடா குடியுரிமை பெற்றுள்ளார். இவர் ஆணையத்தின் முன்பு பல தவறான தகவல்களை அளித்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
அமெரிக்காவிலும் இவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அங்கு தொலைபேசி மூலமாகப் பேசி மோசடி செய்த வழக்குகள் எழுபத்தொன்றும் அஞ்சல் மூலமாகத் தகவல் அனுப்பி மோசடி செலவு வழக்குகள் இருபத்தியிரண்டும்,சர்வதேச கறுப்புப்பண மோசடி வழக்குகள் பதினேழும் டோரிஸ் நெல்சன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
1872 முதல் நிதிமோசடி பிரிவில் தபால்மோசடி, தொலைபேசி மோசடி வழக்குகளுக்கு இருபது முதல் முப்பது ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது


.newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக