
January 2,
2013 03:45 pm
கேரளாவில், பஸ்களில் பெண்கள் இருக்கைகளில், ஆண்கள்
அமர்ந்தால், 100
ரூபாய் அபராதம்
விதிக்கப்பட உள்ளது.கேரளாவில் ஓடும், அனைத்து
அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், மொத்த
இருக்கைகளில், 25
சதவீத இருக்கைகள், மகளிர், உடல்
ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், பல
பஸ்களில், கூட்ட
நெரிசல் நேரத்தில்,
பெண்கள் மற்றும்
சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில்,ஆண்கள் பயணிக்கின்றனர். அவர்களை எழுந்திருக்கும்படி, பஸ்
கண்டக்டர்களும் கேட்டுக் கொள்வதில்லை.
இதுகுறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், மோட்டார் வாகன சட்டம், 1988 பிரிவு, 111ல்
திருத்தம் செய்ய,
கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து
பஸ்களிலும் பெண்கள்,
உடல் ஊனமுற்றோர், முதியோர் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள
இருக்கைகளில்,
ஆண்கள் அமர்ந்து பயணித்தால், அவர்களிடம், 100 ரூபாய்
அபராதம் வசூலிக்கப்படும்.
இதுதொடர்பான, சட்ட
திருத்த மசோதா,
கேரள சட்டசபையில், விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.
/thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக