puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 9 மே, 2013

தொல்லை கொடுக்கும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுதல்


வருடத்திற்கு மூன்று தடவைகளாவது தலையிடியோடு அவனைத் தாயார் அழைத்து வருவாள்.

அவனது தலையிடிக்கான காரணம் இப்பொழுது அவனுக்கும் தெரியும். அவனது தாயாருக்கும் நன்றாகத் தெரியும்.


வகுப்பில் முதல் மாணவன். ஆனாலும் தவணைப் பரீட்சை வரும்போது தனது முதலாம் இடம் தப்பிவிடக் கூடாது என்பதால் ஏற்படும் மனஅழுத்தம் தலையிடியாக அவனில் வெளிப்படுகிறது. 

மற்றொரு குடும்பத் தலைவியின் மண்டைவலி கடுமையானது. பாராத மருத்துவர்கள் இல்லை. செய்யாத பரிசோதனைகள் மிச்சமில்லை. மூளைக்குள் கட்டி, சைனஸ் சளி, சொத்தைப் பல் போன்ற நோய்கள் காரணமாக இருக்கலாம் என மருத்துவம் செய்துவிட்டாள்.


ஆனால் அடிப்படைக் காரணம் மனஅழுத்தம்தான். கணவன் பல வருடங்களாக வெளி நாட்டில். அவன் இங்கு வரவும் முடியாது, இவர்கள் அங்கு போகவும் முடியாது. வளர்ந்த பெண் பிள்ளைகளுடனும், விடலைப் பயலுடனும் அல்லாடும் மனஅழுத்தம் அவளுக்கு. 

மன அழுத்தம்

தலைவலி மட்டுமல்ல, நெஞ்சு வலி, வயிற்று வலி, சோர்வாக இருக்கு, பசியின்மை, அடங்காத பசி, பாலியல் குறைபாடு, தூக்கக் குழப்பம், மாதவிடாய்ப் பெருக்கு போன்ற பிரச்சனைகளுடன் வரும் பலருக்கு மனஅழுத்தமே அடிப்படைக் காரணமாக இருக்கிறது.Stress என ஆங்கிலத்தில் வழங்கும் மன அழுத்தத்தை உளநெருக்கீடு என்று இப்பொழுது சொல்கிறார்கள். சாக்கடையை என்ன பெயர் சொல்லி அழைத்தாலும்; அதன் தாக்கம் எப்பொழுதும் நாற்றம்தான். அதேபோல மனஅழுத்தத்தை என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் பாதிப்புற்றவருக்கு பொறுக்க முடியாததுதான்.

பாதிப்புகள்

எரிச்சல், கோபம், சினம், படபடப்பு, ஒழுங்காகத் தனது கடமைகளைச் செய்ய முடியாத நிலை போன்றவை மனஅழுத்தம் காரணமாக ஏற்படலாம். வேண்டாத வார்த்தைகளை பொருத்தமற்ற வேளைகளில் உதிர்த்து விடுகிறார்கள். இதனால் குடும்ப மற்றும் நட்பு உறவுகளில் விரிசல் அடைதல் போன்ற சிக்கல்களை நாளாந்தம் எதிர் கொள்ள நேர்கிறது. 


ஆனால் இவற்றிக்கு மேலாக பல உடல்நோய்களைக் கொண்டு வருகின்றன. மேலும் பலநோய்களைத் தீவிரப்படுத்துகின்றன. உயர் இரத்த அழுத்தம், சுவாசப் பிரச்சனைகள், சமிபாட்டுப் பிரச்சனைகள், இருதயத் துடிப்பில் மாற்றங்கள், தசைப் பிடிப்புகள் போன்றவை சில உதாரணங்களாகும்.

விடுபட உதவும் வழிமுறைகள்

மன அழுதத்திலிருந்து விடுபட வேண்டுமாயின் அதற்கான காரணம் நீங்க வேண்டும். ஆனால் அது எப்பொழுதும் சாத்தியமானதல்ல. ஆனால் அதன் தொல்லையை நீக்க வேண்டுமாயின் வேறு விடயங்களில் எமது மனதைச் செலுத்த வேண்டும். வாசிப்பு, சினிமா, விளையாட்டு, சமையல், ஆன்மீகம் என தனக்குப் பிரியமான விடயங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


நெருக்கமானவர்களுடன் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது அவசியம், மது, போதை, மற்றும் புகைத்தலில் மாட்டுப்படக் கூடாது. கோப்பி தேநீர் போன்றவையும் அதிகம் கூடாது.

மருத்துவ ரீதியாகவும் பல வழிகளைச் சொல்லித் தருகிறார்கள். உடல் உழைப்பு, உடற் பயிற்சிகள், தியானம், யோகாசனம், சாந்த வழி முறைகள் 
(Relaxation techniques), Tai chi எனும் சீன உடற் பயிற்சி முறை போன்ற பல உள்ளன. இவற்றைச் சொல்லித் தரும் நபர்களும், நிலையங்கள் பலவும் இப்பொழுது இருக்கின்றன.

மேற் கூறியவற்றை பயில முடியாதவர்கள், எமது பாரம்பரியத்தில் வந்த சில முறைகளைத் தாங்களாகவே வீட்டிலிருந்து முயற்சிக்க முடியும்.

சுவாசப் பயிற்சி 

மன அழுத்தங்களிலிருந்து விடுபட சுவாசப் பயிற்சி கைகொடுக்கும்.

அங்குமிங்கும் சஞ்சரிச்சு உளைச்சலடையும் மனதை ஒருமுகப்படுத்த யோகாசனப் பயிற்சியின் ஒரு அங்கமாகச் சுவாசப் பயிற்சி செய்யப்படுகிறது. அது பத்மாசனத்திலிருந்து செய்யப்படுவது. 

காலத்திற்கு ஏற்ற வகையில் இதனை விஞ்ஞான பூர்வமாகவும் இலகுவான முறையில் செய்யலாம்.
 • இரு பாதங்களும் தரையில் இருக்குமாறு ஒரு நாற்காலியில் முதுகை நிமிர்த்தியபடி உட்காருங்கள்.
 • உள்ளங் கைகள் இரண்டையும் வயிற்றில் படுமாறு உங்கள் தொடைகளில் தளர்ச்சியாக வையுங்கள்.
 • ஒன்று இரண்டு மூன்று நாலு என மனதிற்குள் எண்ணிக்கொண்டு மெதுவாக மூக்கினால் மூச்சை உள்ளெடுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்கள் வயிறு உயர்வதை அவதானத்தில் எடுங்கள்.
 • ஒரு செகண்ட் நேரத்திற்கு மூச்சைப் பிடியுங்கள்.
 • முற் கூறியவாறு எண்ணிக்கொண்டு வாயினால் மூச்சை வெளியே விடுங்கள். மூச்சை விடும்போது உயர்ந்த வயிறு தளர்வதை அவதானியுங்கள்.
 • உங்கள் அவதானம் முழுவதும் உங்கள் சுவாசத்தில் மட்டுமே இருக்க வேண்டும். மனம் அடங்காமல் அலைந்தால் அதன் பாட்டிற்கு விட்டுக் கொடுத்து மீண்டும் சுவாசத்தில் ஒன்ற வைக்க முயலுங்கள். தொடர்ந்து பயின்று வர ஒழுங்கான முறையில் செய்ய முடியும்.
 • இப் பயிற்ச்சியை 10 தடவைகள் மீளச் செய்யுங்கள்.

சாவசனம்


யோகாசனத்தில் சாவசனம் என்றெரு பயிற்சி உள்ளது. பெயரைக் கேட்டுப் பயப்படாதீர்கள். இதுவும் நல்லதொரு பயிற்சியாகும்.
 • காற்றோட்டமுள்ள வசதியான ஆளரவமற்ற அமைதியான இடத்தில் படுத்திருங்கள். தரை கட்டில் பாய் எதுவானாலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுங்கள்.
 • தளர்ச்சியான உடைகளைத் தேர்ந்தெடுங்கள்.
 • கை கால்களைத் தளர்ச்சியாக நீட்டியபடி படுத்திருங்கள்.
 • இப்பொழுது பாதத்திலிருந்து ஒவ்வொரு உறுப்பாக மனத்தில் நினைக்க வேண்டும்.
 • முதலில் கால் பெருவிரல்களில் ஆரம்பியுங்கள்.
 • அவற்றை தளரச் செய்யுங்கள்.
 • அவை ஆரோக்கியமாக நல்ல நிலையில் இருப்பதாகவும் நன்றாகச் செயற்படுவதாகவும் நினைத்து மனதைச் சாந்தப்படுத்துங்கள்.
 • பின் அருகில் உள்ள ஏனைய விரல்களையும் தளரச் செய்து அவை பற்றி முற் கூறியவாறு நினைத்துச் சாந்தப்படுங்கள்.
 • பாதம், கணுக்கால், கெண்டை, முழங்கால், தொடை, பிறப்புறுப்புகள், அடிவயிறு, மேல் வயிறு, இருதயம், நெஞ்சறை, கைகள், கழுத்து, தாடை, முகம், காது, மூக்கு, கண், நெற்றி, தலை எனப் படிப்படியாக மேல் நோக்கித் தளர்த்திச் செல்லுங்கள்.
 • இறுதியாக மூளையையும் அவ்வாறே தளரத்தி அமைதி கொள்ளுங்கள்.

இது ஒரு ஆனந்த நிலையைக் கொடுக்கும்.

சில நிமிடங்கள் அவ்வாறு அமைதியாகப் படுத்து இருங்கள்
பின்னர் உங்கள் உடல் உறுப்புகளை மெதுவாக இயக்கி எழுந்திருங்கள்.உங்களுக்கு உகந்த முறையைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து செய்து வாருங்கள். மன அழுத்தத் தொல்லையிலிருந்து விடுபட்டு உடல் நலமும் உள நிறைவும் பெற்று வாழ முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன். 
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
hainallama thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக