puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 8 மே, 2013

தங்குவதற்கான விசாக்களை ஒழுங்கு படுத்திக்கொள்ளுங்கள், அல்லது வெளியேறுங்கள் : சவுதி அரேபியா




சவுதியில் பணிபுரியும் இந்தியர்கள் இன்னமும் மூன்று மாதங்களுக்குள் தங்களது தங்கு விசாக்கள் அனைத்தையும் நெறிப்படுத்திக்கொள்ளுமாறும் அல்லது நாட்டை விட்டு கௌரவமாக வெளியேறுமாறும் சவுதிக்கான இந்தியான தூதுவர் அறிவித்துள்ளார்.

சவுதி அரேபியா வெளிநாட்டு பணியாளர்கள் தொடர்பில் பல இறுக்கமான நடைமுறைகளை அண்மையில் அமல்படுத்தியது. சவுதியர்களுக்கு வேலையிடங்களில் அதிக முன்னுரிமை வழங்குமாறும், ஒழுங்குமுறையற்ற விசாக்கள் உடைய வெளிநாட்டவர்களை உடனடியாக சேவை நீக்கம் செய்து வெளியேற்றுமாறும் கூறியிருந்தது.

இந்நிலையில் சவுடி அரேபியாவுக்கான இந்திய தூதுவர் ஹமீத் அலி ராவோ நேற்றுவிடுத்துள்ள அறிவிப்பில், ரியாத் மற்றும் ஜித்தாவில் உள்ள இந்திய தூதரகங்கள், இது தொடர்பிலான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சவுதியில் பணி புரியும் இந்தியர்கள் உடனடியாக தங்களது வேலை விசாக்கள் தங்கு விசாக்களை ஒழுங்கு படுத்திக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று மாத கால அவகாசம் வழங்கிய சவுதி அரேபிய அரசுக்கு நன்றி கூறிக்கொள்வதாகவும், வெளிநாடு ஒன்றில் வசிக்கும் போது அந்நாட்டு சட்டதிட்டங்களை மதித்து அவற்றுக்கு கௌரவம் அளிக்க வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இப்புதிய காலக்கெடுவின் படி, மூன்று மாத காலத்திற்குள் சவுதியில் பணிபுரியும் இந்தியர்கள் தங்களது விசாக்களை ஒழுங்கமைத்து சவுதியில் தொடர்ந்து சட்டபூர்வமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும், அல்லது சட்டவிரோதமாக விசாக்களின்றி இருப்பவர்கள் தாமாக முன்வந்து நாட்டுக்கு திரும்பிச்செல்லல் வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

நிதாகத் நிகழ்ச்சி திட்டம் எனும் இப்புதிய சட்டத்தின் படி,  ஒவ்வொரு 10 வெளிநாட்டு பணியாளர்களுக்கும், ஒரு சவுதி அரேபியர் எனும் விகிதித்ததில் கட்டாயமாக ஒவ்வொரு நிறுவனமும் வேலைக்கு ஆட்களை எடுத்தல் வேண்டும்.  இது இந்தியர்கள் மாத்திரம் பணிபுரியும் நிறுவனங்களின் வேலைவாய்ப்புக்களில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமளவிலான இந்தியர்கள் இதனால் சவுதியில் வேலைவாய்ப்பையும் இழந்துள்ளனர்.

4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக