puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 7 மே, 2013

திருச்சி, தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வறட்சி பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டது

  [செவ்வாய் - 7 மே-2013 -
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசு தமிழகத்துக்கு வறட்சி நிவாரண உதவியாக ரூ. 19 ஆயிரத்து 665 கோடி வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை அளிக்க நிபுணர் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.அவர்கள் நேற்று சென்னை வந்தனர். தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இன்றும் நாளையும் அவர்கள் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் மதுரை ராமநாதபுரம் விருதுநகர் மாவட்டங்களிலும் வறட்சி பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.வேளாண்மை துணை ஆலோசகர் மனாஸ் சவுத்திரி தலைமையிலான குழுவினர் இன்று திருச்சி வந்தனர். திருவெறும்பூர் வழியாக தஞ்சை மாவட்டம் சென்று வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். தஞ்சையை அடுத்த வல்லத்தில் வறட்சி காலத்தில் கால்நடைகளுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவன உற்பத்தி பணிகளை பார்வையிட்டனர்.பின்பு ஆலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உழவர் பெருவிழா மற்றும் கால்நடைகளுக்கான மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பார்வையிட்டனர். அதன் பிறகு சித்திரக்குடிக்கு சென்று அங்கு வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். மேலும் சித்திரக்குடியில் நடைபெற்ற போர்வெல் பணிகளையும் பார்வையிட்டனர். அங்கு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.ராயந்தூர் கிராமத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகளையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தையும் மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மதியம் தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்கள். பிற்பகல் திருவாரூர் நாகை மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.முன்னதாக மத்திய குழு திருச்சி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். திருவெறும்பூர் அருகே உள்ள பனையங்குறிச்சியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல் வாழை மற்றும் பயிர்களை பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் கருகிய பயிர்களையும் வெடித்து போன நிலங்களையும் காட்டி அதிகாரிகளிடம் நிலைமையை எடுத்துக் கூறினார்கள்.மற்றொரு குழுவினர் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். மத்தியக் குழுவினர் மதுரை ரிங்ரோட்டில் உள்ள பாண்டி கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து மத்திய குழுவினர் வந்த காரை மறித்து முற்றுகையிட்டு குறைகளை தெரிவித்தனர்.கடந்த 1 மாதமாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வரவில்லை என்றும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறி இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.முன்னதாக மத்திய குழுவினர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடனும் வருவாய்த்துறை வேளாண்மைத் துறை உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்கள்.நாளை (புதன்கிழமை) விருதுநகர் மதுரை ஆகிய மாவட்டங்களில் வறட்சி பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிடுகிறார்கள். மாலையில் சென்னை திரும்புகிறார்கள். 9-ந்தேதி தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். அன்று மாலையே டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். அதன் பின்னர் தமிழகத்தின் வறட்சி நிலவரம் குறித்து மத்திய அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்கின்றனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசுஇ தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியை அளிக்கும்.

tamilantelevision thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக