puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 5 மே, 2013

மகாராஷ்டிராவில் இருந்து சேலத்துக்கு 49 மணி நேரத்தில் 1000 கி.மீ. பறந்து வந்த புறாவுக்கு பரிசு



சேலம்: மகாராஷ்டிராவில் இருந்து சேலத்துக்கு 49 மணி நேரத்தில் 1000 கிலோ மீட்டர் கடந்து வந்த புறாவின் உரிமையாளருக்கு சேலத்தில் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. சேலம் பந்தய புறா வளர்ப்போர் சங்கம் சார்பில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை 9 பிரிவுகளில் புறா போட்டிகள்
நடத்தப்பட்டது. கர்நாடகா மாநிலம் சிந்தாமணி & சேலத்திற்கு 200 கிலோ மீட்டர், ஆந்திர மாநிலம் கதிரி&சேலம் 280 கிலோ மீட்டர், தாட்பத்ரி & சேலம் 370 கிலோ மீட்டர், கர்னூல்& சேலம் 470 கிலோ மீட்டர், மெகபூர்& சேலம் வழியாக 570 கிலோ மீட்டர், கம்மாரெட்டி&சேலம் 750 கிலோ மீட்டர், மகாராஷ்டிரா வார்தா & சேலம் 1000 கிலோ மீட்டர் தூரம் புறாக்களை பறக்க விடும் போட்டி நடந்தது.இதில் வெற்றி பெற்ற புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று சேலத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை புறா வளர்ப்போர் சங்க தலைவர் தனசிங் தலைமை வகித்தார். புறா பந்தய போட்டியில் முதலில் வந்த புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  சேலம் புறா வளர்ப்பு சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் சங்கர், பொருளாளர் முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் இருந்து சேலம் வரை (ஏர் ரூட்) 1000 கிலோ மீட்டர் தூரத்தை 49 மணி நேரத்தில் வேடிச்சி கவுண்டர் என்பவரின் புறா கடந்து முதலில் வந்து சாதனை படைத்தது. 110 மணி நேரத்தில் கடந்த நிலையில் கோபால் என்பவரின் புறா இரண்டாவது இடத்தை பிடித்தது. இந்த சாதனை படைத்த புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

dinakaran thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக