puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 9 மே, 2013

பிளஸ்-2 தேர்வு முடிவு: கணிதம் பாடத்தில் 2,352 பேர் 200-க்கு 200 மதிப்பெண்


பிளஸ்-2 தேர்வு முடிவு: கணிதம் பாடத்தில் 2,352 பேர் 200-க்கு 200 மதிப்பெண்
சென்னை, மே. 9- 

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கணிதம் பாடத்தில்தான் அதிகமான மாணவ-மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண்கள் (செண்டம்) பெற்றனர். 

கணிதம் பாடத்தில் 2,352 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனால் இது கடந்த ஆண்டை விட 304 பேர் குறைவாகும். இந்த முறை கணிதம் பாடத்திற்கான கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கணிதம் பாடத்தில் 2,656 பேர் செண்டம் எடுத்து இருந்தனர். 

வேதியியல் பாடத்தில் 1,499 மாணவ- மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர். கடந்த ஆண்டைவிட 55 பேர் கூடுதலாக செண்டம் அடித்து உள்ளனர். இதேபோல கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும் இந்த முறை அதிகம் பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 

இயற்பியல் பாடத்தில் 36 பேர்தான் செண்டம் எடுத்து இருந்தனர். கடந்த ஆண்டைவிட 106 பேர் குறைவாகும். விலங்கியல் பாடத்தில் எந்த ஒரு மாணவ-மாணவியும் 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை. 

கடந்த ஆண்டு 4 பேர் செண்டம் பெற்று இருந்தனர். ஒவ்வொரு பாடத்திலும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம் (அடைப்பு குறிக்குள் கடந்த ஆண்டு செண்டம் எடுத்தவர்கள்.):- 

1. கணிதம்- 2352 (2656) 
2.வேதியியல்- 1499 (1444) 
3. கம்ப்யூட்டர் சயின்ஸ்- 1469 (615) 
4. உயிரியியல்-682 (620) 
5. இயற்பியல்- 36 (142) 
6. தாவரவியல்- 11 (6) 
7. வணிகவியல்-1336 (921) 
8.அக்கவுண்டன்சி -1815 (2518) 
9. வர்த்தக கணக்கு-430 (475)

maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக