puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

நம்புதாளை ஊராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு


தொண்டி
நம்புதாளை ஊராட்சி யில் கடும் குடிநீர் தட்டுப் பாடு நிலவி வருகிறது.
குடிநீர் தட்டுப்பாடு
திருவாடானை தாலுகா நம்புதாளை ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 12 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். திருவா டானை யூனியனி லேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் பல்வேறு குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வா கம் சார்பில் 20 வீடுகளுக்கு ஒரு குடிநீர் குழாய் என்ற அடிப்படையில் 85க்கும் மேற் பட்ட இடங்களில் தெருக் குழாய்களை அமைத்துள் ளது.

ஆனால் இவ்வூராட்சி பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படாததால் குடிநீருக்காக இங்குள்ள மக் கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இங்குள்ள வன்னிய படையாச்சி தெரு வில் மட்டும் சுமார் 6 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகு திக்கு 10 நாட்கள் அல்லது ஒரு வாரத்துக்கு ஒரு முறை ஒரு குடும்பத்துக்கு 5 குடங்கள் வீதம் மட்டுமே குடிநீர் கிடைக் கிறது. இதனால் பொதுமக் கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் குடிநீர் விலை கொடுத்து வாங்கி பருக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நடவடிக்கை
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கிட்டிணம்மாள் கூறி யதாவது: எங்கள் படை யாச்சி தெருவுக்கு 20 குடும் பங்களுக்கு ஒரு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்கப்ப டும் குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி யில் உள்ளவர்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பருகி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் உப்புநீரையும், அசுத்தமான தண்ணீரையும் எடுத்து வந்து உபயோகித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய கவனம் செலுத்தி ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதுபற்றி காவிரி குடிநீர் உதவி பொறியாளர் கதிர் வேல்சாமி கூறும்போது, நம்புதாளை ஊராட்சிக்கு தொண்டி தரைமட்ட தொட் டியில் இருந்து ஒரு லட்சம் லிட்டரும், குளத்தூர் தரை மட்ட தொட்டியில் இருந்து ரூ.1½ லட்சம் லிட்டரும் என தினமும் சுமார் 2½ லட்சம் லிட்டர் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை ஊராட்சி நிர்வாகம் தான் குடியிருப்புக ளுக்கு வழங்கி வருகிறது என்று தெரிவித்தார்.

dailythanthi. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக