puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 3 ஏப்ரல், 2013

அணுஆயுதமென்பது விளையாட்டுக்குரிய பொருளல்ல - பான் கீ மூன்

[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 04:49.33 மு.ப GMT ]
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணுகுண்டு சோதனை நடத்தியதால், ஐ.நா. புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிரான அறிவிப்புகளை வடகொரியா வெளியிட்டு வந்தது.இதன் உச்ச கட்டமாக தென்கொரியா மீது தற்போது போர் பிரகடனம் செய்துள்ளது. அமெரிக்காவை தாக்கும் வகையில் ஏவுகணைகளையும் வட கொரியா தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், சர்வதேச அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து, கடந்த 2007-ம் ஆண்டு மூடப்பட்ட யோங்பியோன் அணுசக்தி வளாகம் மீண்டும் திறக்கப்படும் என்று வட கொரியா நேற்று அறிவித்தது.


முன்னதாக, கொரியா தொழிலாளர்கள் கட்சிக் கூட்டத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜோங்-யுன் பேசும்போது அணுசக்தி திறன் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுவது குறித்து விளக்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வட கொரியாவை ஆயுத போட்டிகளில் ஈடுபட வைத்து நமது பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படுத்த அமெரிக்கா நினைக்கிறது. உறுதியான அணு பலத்தை அடிப்படையாகக் கொண்டே அமைதியும் வளர்ச்சியும் அமைய முடியும். அப்போதுதான் மக்களிடம் மகிழ்ச்சி இருக்கும். எந்த அளவுக்கு அணு ஆயுதத் திறன் இருக்கிறதோ, அந்த அளவுக்கு மற்ற நாடுகளின் படையெடுப்புகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.

நமது அணு ஆயுத பலம், போர்களை எதிர்க்கும் திறனுடன் இருக்கிறது. அது நமது இறையாண்மையை பாதுகாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வட கொரியாவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

அணு ஆயுத அச்சுறுத்தல்கள் என்பது விளையாட்டல்ல. வட கொரியாவின் தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டை இழந்து வெகு தூரம் சென்றுவிட்டது. இது மேலும் எல்லை மீறி செல்வதற்குள் அமைதி ஏற்பட வேண்டும். அணுஆயுத ஒப்பந்தத்தை மீறியதற்காக வட கொரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கம் எந்த நாட்டிற்கும் ஏற்படவில்லை என நான் கருதுகிறேன்.

எனினும், வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு மற்றவர்கள் பதிலடி கொடுத்து விட்டால் அதன் பின்னர் உருவாகக் கூடிய பின்விளைவை எண்ணி நான் கவலையும், அச்சமும் அடைந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
newsonews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக