puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும்: தில்லி மாநாட்டில் தமிழக அரசு வலியுறுத்தல்



சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக சட்டத் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி வலியுறுத்தினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் மாநாட்டில் கலந்து கொண்டு அவரது உரையை முனுசாமி வாசித்தார்.
""தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையை இந்தத் தருணத்தில் முன்வைக்க விரும்புகிறேன்.
"உயர் நீதிமன்ற தீர்ப்புகள், விசாரணை, ஆணைகள் போன்றவற்றை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று மாநில மொழிகளில் மேற்கொள்ளலாம்' என்று அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 348(2) மற்றும், 1963-ம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டத்தின் பிரிவு 7 ஆகியவை கூறுகின்றன.
இந்த வழக்கத்தை ஏற்கெனவே நான்கு மாநிலங்கள் கடைப்பிடிக்கின்றன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க விடுக்கப்படும் கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக, மத்திய உள்துறையின்கீழ் உள்ள அலுவல் மொழிகள் துறை கடந்த ஜனவரி மாதம் அனுப்பிய கடிதத்தில், "மாநில மொழியில் வழக்காடும் கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தின் முழுமையான அமர்வு 2012 அக்டோபர் 11-ம் தேதி ஆய்வு செய்தது.
1997 மே 7-ம் தேதி, 1999 அக்டோபர் 15-ம் தேதி ஆகிய நாள்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மாநிலம் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க வேண்டாம் என முடிவு  செய்யப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
நீதித் துறை நிர்வாகத்தை உண்மையாகவே நாம் மக்களுக்குக் கொண்டு செல்ல விரும்பினால் மாநில சட்டப்பேரவை, மாநில அரசு நிர்வாகம் போல சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில மொழியில் வழக்காட அனுமதிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் அவற்றின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் காவிரி நீர் பெறும் உரிமையை நிலை நாட்ட 20 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகளில் நான் இடையறாது போராடி வந்தேன்.
கடைசியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. எனவே, நீதித் துறையின் முக்கியத்துவத்தை தமிழகம் நன்கு உணர்ந்துள்ளது.
மத்திய நிதி: 2013-14 நிதியாண்டில் நீதித் துறைக்கான கட்டமைப்பையும், வளங்களையும் உருவாக்க ரூ. 695 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியாண்டில் நீதித் துறை கட்டமைப்புக்காக மத்திய அரசு ரூ. 70 கோடி ஒதுக்கினால்தான், 2016-ம் ஆண்டில் அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டடத்தில் இயங்கும் நிலை ஏற்படும்.
தற்போதுள்ள 56 மாலை நேர நீதிமன்றங்கள் நீங்கலாக, மேலும் 90 மாலை நேர நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. 
பாலியல் குற்றங்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் கொடுமையான குற்றங்களாக கருதப்பட்டு, துணை போலீஸ் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் பெண் காவலர்களால் விசாரிக்கப்படுகின்றன.
இந்த வழக்குகள் பைசல் செய்யப்படும்வரை அதன் நடவடிக்கையை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி ஆய்வு செய்வர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் அரசு சார்பில் பெண் வழக்குரைஞர்கள் நியமிக்கப்படுவர்.
பாலியல் கொடூரச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவை அரசே முழுமையாக ஏற்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கும் உதவிகளை அரசு வழங்குகிறது.
சிறார் நீதிமன்றம்: அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு சிறார் நீதிமன்றத்தையும், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சில வழக்குகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வசதியாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், மாற்று முறை வழக்காடு தீர்வை மையம் (ஆல்டர்னேட் டிஸ்ப்யூட் ரிசல்யூஷன் சென்டர்) உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தகைய 29 மையங்களை மாவட்ட தலைநகரங்களில் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று முனுசாமி பேசினார்.
மாநாட்டில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே. அகர்வால், தலைமைப் பதிவாளர் சொக்கலிங்கம், மாநில உள்துறை முதன்மைச் செயலர் ஆர். ராஜகோபால், மாநில சட்டத்துறை செயலர் ஜி. ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

dinamani thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக