puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 10 ஏப்ரல், 2013

பாக்.கிற்கு உதவினார் இந்திரா காந்தி: விக்கிலீக்ஸ் தகவலால் சர்ச்சை



பதிவு செய்த நாள் -
ஏப்ரல் 10, 2013  at   1:33:42 PM
 
பாகிஸ்தானுடன் அணு ஆயுத தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி முன்வந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

1974-ஆம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்திய பின் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, பாகிஸ்தானை சமாதானப்படுத்த நடவடிக்கை எடுத்தார் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோவுக்கு கடிதம் எழுதிய அவர், பொருளாதார காரணங்களுக்காக மட்டுமே பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அணு குண்டு தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்க தயாராக இருப்பதாக அந்த கடிதத்தில் இந்திரா காந்தி கூறியுள்ளார். இதுபற்றிய விவரங்களை இந்திராகாந்தி, நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.ஆனால் வெளிநாடுகள் இந்தியாவுக்கு எதிராக தடை விதித்ததன் காரணமாக பாகிஸ்தானுக்கு அணு தொழில்நுட்பத்தை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.
இதுபற்றி பேசிய இந்திராகாந்தி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டு சோதனையை மற்ற நாடுகள் விமர்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.
ஒரு தொழில்நுட்பம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை முறையாக அறிந்துகொள்ளாமல் மற்ற நாடுகள் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றன என இந்திரா காந்தி கூறியதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி பற்றி விக்கிலீக்ஸ்
பிரதமர் ஆவதற்கு முன்பு போர் விமானங்கள் வாங்குவதில் இடைத்தரகராக ராஜிவ்காந்தி செயல்பட்டதாக விக்கிலீக்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியிட்டிருந்தது. இது குறித்து காங்கிரஸ் விளக்கமளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாராயணசாமி குற்றச்சாட்டு
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், யூகத்தின் அடிப்படையில் விக்கிலீக்ஸ் தகவல்கள் வெளியிடுவதாகவும், அதற்கு பதிலளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக