puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 1 ஏப்ரல், 2013

ஏர் இந்தியாவில் தொடரும் சம்பள பிரச்சினை


ஏர் இந்தியாவில் தொடரும் சம்பள பிரச்சினை
புதுடெல்லி ஏப்ரல் 1-

இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா ஏற்கனவே பங்குகளின் சரிவு, லாபத்தில் தொய்வு, அதிகரித்து வரும் ஊழியர்கள் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள தர்மாதிகாரி கமிஷன், விமானிகளின் ஊதிய உயர்வுகளைக் குறைத்து அறிக்கை வெளியிடக்கூடும் என்ற நிலையில் புதிய பிரச்சினை ஒன்றும் உருவாகியுள்ளது.


தொடர்ந்து தாமதமாக வழங்கப்படும் ஊதியத்தினாலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கமிஷன் ஊதிய உயர்வைக் குறைக்கலாம் என்ற ஐயப்பாடும், விமானிகளிடம் எழுந்ததை அடுத்து இன்று வர்த்தக விமானிகள் கூட்டமைப்பு ஒன்றுகூடி இதுகுறித்து விவாதிக்க உள்ளது. சென்ற மாதம் அடிப்படை ஊதியமே வழங்கப்பட்டது என்றும், அதில் 80 சதவீத பயணச் சலுகைகள் தரப்படவில்லை என்றும் விமானிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தாங்கள் இந்தத் தொடர் சம்பளப் பிரச்சினைகளால் மிகவும் வெறுப்படைந்து இருப்பதாக சங்க உறுப்பினர் ஒருவர் கூறினார். ஏற்கனவே குறைவான சம்பளம் பெறும் தாங்கள், கமிஷன் பரிந்துரைக்கும் அதிகப்படியான பிடித்தங்களை ஏற்க இயலாது என்றும் விமானிகள் கூறுகின்றனர்.

இந்தியாவில் இயங்கும் மற்ற வர்த்தக விமானங்கள் மற்றும் வளைகுடா விமான நிறுவனங்களின் ஊதிய விபரங்களை அவர்கள் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். மாற்றங்களை கண்டுள்ள ஏர் இந்திய நிறுவனமும், அந்தப் பலன்களை அவர்களுடைய ஊழியர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

maalaimalar thanks


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக