puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

ஜெகன் மோகன் ரெட்டி 5-வது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த சி.பி.ஐ


ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதாகி 10 மாதங்களுக்கு மேலாகியும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் சி.பி.ஐ. ஏற்கனவே 4 குற்றப்பத்திரிகை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது.

நேற்று 62 பக்கங்கள் கொண்ட 5-வது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. இதில் கிரன்குமார் ரெட்டி மந்திரி சபையில் உள்துறை மந்திரியாக இருக்கும் சபிதா இந்திரா ரெட்டி 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜெகன்மோகன் நிறுவனங்களில் முதலீடு செய்து இருந்த டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு 1997-ம் ஆண்டு ராஜசேகர ரெட்டி மந்திரி சபையில் சுரங்க மந்திரியாக இருந்த சபிதா இந்திரா ரெட்டி மலிவான விலைக்கு சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
புதிய குற்றப்பத்திரிகையில் 13 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். 46 காட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை தொடர்ந்து சபிதா இந்திரா ரெட்டி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தார்.
முதல்-மந்திரி கிரன்குமார் ரெட்டியை சந்தித்து தனது ராஜினாமா முடிவை கூறினார். ஆனால் ராஜினாமாவை கிரன்குமார் ரெட்டி ஏற்கவில்லை. சி.பி.ஐ.யின் அடுத்த நடவடிக்கையை பொறுத்து முடிவு எடுக்கலாம் என அறிவுரை வழங்கினார்.
jegan-mohan

tamilcnn thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக