puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 5 மார்ச், 2013

மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுப்பதை தடுக்க முடியாது : ப.சிதம்பரம்
இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று முதன்முறையாக கூகுள் ஹாங்கவுட் ஊடாக நேரடி கேள்வி பதில்களுக்கு பதில் அளித்தார்.
ஒரு மணிநேரம் நீடித்த இந்த நிகழ்வில், வர்த்தக நிபுணர்கள், தொழிலதிபர்கள், IIM மாணவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரது கேள்விகளுக்கும் அவர் விரிவாக பதில் அளித்தார்.


அதன் போது, மீண்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உத்வேகத்தை தொடங்குவதற்காக அரச மற்றும் தனியார் பகுதிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு காலாண்டுக்குமான  மூலதன திட்டங்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்வதாகவும், அடுத்த வருடத்திற்கான தங்களது இலக்கை நோக்கி, இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதலே ஆராயத்தொடங்கிவிடுவதாகவும் தெரிவித்தார். மேலும் மூலதன திட்டங்கள் பிழைக்குமாயின் சிறப்பு ஈவுத்தொகை கோரப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த வருடம் பொருளாதார வளர்ச்சி 5% வீதமாக சரிந்துவிட்ட போதும், அடுத்த வருடம் 6% வீதமும் அதற்கடுத்த அடுத்த வருடங்களில் 7%,8% வீதமாக உயர்வடைந்து, 9% வீதம் வரை வளர்ச்சி காண தாம் இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த வருடத்திற்கான நடப்பு நிதி பட்ஜெட் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் 'தமக்கு போதுமான பொருளாதார வெளி கிடைக்கவில்லை எனவும், அவ்வாறு கிடைக்குமானால், ஏப்ரல்-செப்டெம்பர் காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கு இன்னமும் அதிகம் செய்ய முடியும்' எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

IIM-B ஐ சேர்ந்த ரீச்சல் வர்தன் எனும் மாணவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ப.சிதம்பரம், பெண்களுக்கான வங்கி தொடங்கப்பட வேண்டுமாயின் அதற்கு கடுமையான பின்புல வேலைகள் செய்ய வேண்டும். அவ்வாறான வங்கிகள் நவம்பர் மாதம், 6 கிளைகளுடன் 6 பிரதேசங்களில் தொடங்கப்படவிருப்பதாக தெரிவித்தார்.

கைத்தொழிலாளர் ஆனந்த் மகிந்திரா என்பவரின் கேள்விக்கு பதில் அளித்த ப.சிதம்பரம், அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ எவையுமே இப்போது பொருளாதார திடீர் வீழ்ச்சியில் இல்லை.  ஏனைய நாடுகளை போன்று பொருளாதாரத்தை நிலையாக தக்கவைத்துக்கொள்ளவே நாமும் முயற்சிக்கிறோம் என்றார்.

மேலும், இந்தியா மூன்றாவது மிகப்பெரும் பொருளாதார சக்தியாக வரவிருப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அதை அடைவதற்கு நாம் கடுமையாக முயற்சிக்க வேண்டும். அதோடு பொருளாதார சட்டங்களை புரிந்து அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

நிதி அமைச்சர் ப.சிதரம்பத்தின் ஹாங்கவுட் முழுமையான வீடியோ

news 4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக