puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 5 மார்ச், 2013

வங்காளதேசத்தில் கலவரம் தீவிரம் : பிரணாப் முகர்ஜி-முன்னாள் பிரதமர் சந்திப்பு ரத்து!



வங்காளதேசத்தில் கலவரம் தீவிரமடைந்து வருவதால் இன்று நடப்பதாக இருந்த பிரணாப்  முகர்ஜி, வங்க தேச முன்னாள் முதல்வர் சந்திப்பு ரத்தாகியுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த 1971ம் ஆண்டு நடந்த சுதந்திரப் போரின்போது, நடந்த அட்டூழியங்களில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய ஜமாஅத்-இ-இஸ்ஸாமி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் தெல்வார் ஹீன்கள் சயீதி, உட்பட 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பை கண்டித்தும், வழக்குகளை கைவிடக் கோரியும், ஜமாஅத் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் 50 பேர் பலியாயினர் என்று தெரியவருகிறது. இதற்கிடையே ஜமாஅத் இ கட்சியின் சார்பில் நேற்று 40 மணி நேர முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. அதிலும் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் ரயிலுக்கு தீ வைப்பு, போலீஸ் நிலையங்களில் தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள்  நடந்தன. இதில் 18 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இச்சூழலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் வங்கதேசம் சென்றார். அங்கு அவருக்கு 21 துப்பாகிகள் குண்டு முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வங்காளதேசம் தலைநகர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேசினார். மேலும் முன்னாள் பிரதமரும், தற்போதைய எதிர்கட்சியான வங்காள தேசிய கட்சித் தலைவருமான பேகம் கலிதா நியாவை இன்று சந்திக்க முடிவு  செய்திருந்தார்.

அதற்கு ஒப்புதல் அளித்து நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது, இந்நிலையில் இவர்களது சந்திப்பு நிகழ்ச்சி திடீரென்று ரத்தாகியுள்ளது. ஜமாஅத் இ இஸ்ஸாமி கட்சி கலிதா சியாவின் வங்காள தேச கட்சியின் கூட்டணிக் கட்சியாகும். கடந்த 2001-04 ம் ஆண்டுவரை கலிதாஷியா அரசில் அங்கம் வகித்தது. எனவே ஜமாஅத் கட்சி நடத்தும் போராட்டத்துக்கு கலிதாஷியா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அக்கட்சி ஆதரவாக இன்று வங்காள தேச தேசிய கட்சி சார்பில், முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கலவரமும் தீவிரமடைந்துள்ளது.

ஆகவே இச்சூழலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாக கலிதாஷியா தரப்பில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக