puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 23 மார்ச், 2013

ராமநாதபுரத்தில் திருட்டு, வழிப்பறியை தடுக்க போலீஸ் தனிப்படை அமைப்பு


: Mar 23 | 03:00 am

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத் தில் திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற் றச்செயல்களை தடுக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை
ராமநாதபுரம் மாவட்டத் தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் சாலை யில் நடந்து செல்லும் பெண் களிடம் மோட்டார் சைக்கி ளில் பின் தொடர்ந்து வரும் மர்ம வாலிபர்கள் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடு பட்டு வருவது அதிகரித்துள் ளது. குற்றவா ளிகளுக்கு சிறை யில் ஏற்படும் பழக்கத்தின் கார ணமாக சிலர் இது போன்ற கைவரிசைகளை காட்டி வரு வது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தடுக்க டி.ஐ.ஜி. ராம சுப்பிரமணி, போலீஸ் சூப்பி ரண்டு மயில்வாகனன் ஆகி யோரது உத்தரவின் பேரில் கீழக்கரை போலீஸ் இன்ஸ் பெக்டர் கணேசன், ராமநா தபுரம் பஜார் இன்ஸ் பெக்டர் கணேசன் ஆகியோர் தலை மையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படையில் தலா ஒரு இன்ஸ்பெக்டர், 5 போலீ சார் நியமிக்கப்பட்டுள்ளனர். தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் நடை பெறும் வழிப் பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங் களை தடுப்பதற்கு தேவை யான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறையில் இருந்து விடுதலையான பழங்குற்றவா ளிகளை கண்டறிந்து அவர்க ளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர திடீர் பணப்புழக்கம் உள்ள நபர்கள் குறித்தும் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரோந்து
மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் இந்த தனிப்படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநா தபுரம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங் களில் பிடிவாரண்டு பிறப்பிக் கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிடப்பட் டுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி மாதம் 40 பேரும், பிப்ரவரியில் 48 பேரும், இம் மாதம் இதுவரை 11 பேரும் என மொத்தம் 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீத முள்ள 120 பேரை பிடிக்க சப்–இன்ஸ்பெக்டர் செல்வ ராஜ் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது.
ராமநாதபுரத்தில் நடை பெற உள்ள வழிவிடு முருகன் கோவில் பங்குனி உத்திர திரு விழாவையொட்டி குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என சந்தேகிக்கப்படும் 40 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிந்து வருவாய் கோட்டாட்சியர் முன் ஆஜர் படுத்தி உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை போலீஸ் துணை சூப்பிரண்டு முரளித ரன் தெரிவித்தார்.

dailythanthi thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக