puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 13 மார்ச், 2013

ஒட்டுக் கேட்பவர்களின் கவனத்திற்கு ...!



சில தினங்களுக்கு முன் ஒரு ஹிந்தி சேனலில் குறு நாடகம் ஒன்றை பார்த்தேன். ஒட்டுக் கேட்பது தொடர்பாக ஒரு முக்கிய கருத்தை அது வலியுறுத்துகிறது.

ஒருவர் தனது மனைவி மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் வாழ்கின்றார். அவருக்கு  தனது தாயை எந்த அளவு பிடிக்குமோ அந்த அளவு மனைவியையும் பிடிக்கும். அதாவது ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற வேலை கிடையாது. ஒரே சமயத்தில் மனைவிக்கு நல்ல கணவன் என்றும்,  தாய்க்கு  நல்ல மகன் என்றும் பேர் வாங்குவது "நெருப்பற்றின் குறுக்கே மயி*ப் பாலம் கட்டி நடப்பதைப் போன்று.."


மாமியார் மருமகள் கருத்து பேதங்கள் எங்கும் இருப்பது.  அதுவும் ஒரே வீட்டில் வசித்தால் இது நிறையவே இருக்கும் என்பது சொல்லித் தெரிய தேவையில்லை. எனவே அவர் இந்த இருவரையும் மேலாண்மை செய்ய நன்றாகவே கற்றுக் கொண்டிருந்தார். எப்படி...?

தனது மனைவி மீது தனது தாய்க்கு கோபம் வரும் நேரத்தில், குறிப்பாக  மனைவி இல்லாத நேரத்தில் தனது தாயிடம், "அவ கிடக்கிறா.. விடும்மா.. அவ சுத்த சோம்பேறி... எதுக்கும் லாயக்கு இல்லாதவள்... என்ன இருந்தாலும் இந்த வயதிலும் உன் சுறுசுறுப்பு என்ன..? உன் சமையல் என்ன..?" என்று தனது தாயை புகழ்த்து பேசுவது. தாய்க்கு உச்சி குளிர்ந்து விடும் என்பதை மறுக்க முடியுமா..?

அதே போன்று, தனது மனைவியிடம், தாய் இல்லாத நேரத்தில்,"எங்கம்மாவிற்கு வயசாச்சே தவிர கொஞ்சம் கூட புத்தி கிடையாது...நம்ம உயிரை எடுக்குது கிழடு... எங்கியாவது ஆசிரமத்திலே கொண்டு போய் விட்டுவிடலாம் போல இருக்கு" என்று தாயைப் பற்றி சலித்துக் கொள்வது. தன்னை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் இப்படி பேசுகிறாரே என்று நினைத்து மனைவி அவரை அப்படியே ஆசையுடன் கட்டிக் கொள்வாள்.

இருவருக்கும் சேலை, நகை போன்று ஏதாவது வாங்கும் போதும் இவ்வாறு ஏற்றியும்.. மட்டம் தட்டியும் பேசி நன்றாகவே மேலாண்மை செய்து வந்தார் அக்கணவர்.

பிரச்சனைகளை சமம் செய்து, அவர் நன்றாகவே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இது ஒரு நாள் பூதாகரமாகி விட்டது. மனைவி வீட்டில் இல்லை என்று நினைத்து, தனது தாயிடம் மேற்கண்டவாறு மனைவியைப் பற்றி "புகழ்ந்து" பேசும் போது, மனைவி ஒட்டுக் கேட்டு விடுகிறாள். அதற்கு பிறகு என்ன நடந்திருக்கும் என்பது சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறுதான் தனது மகன் தன்னிடமும் பேசி வந்துள்ளார் என்று தாய்க்கும் புரிந்து அவருக்கு ஏகப்பட்ட வருத்தம். நிலையை விளக்கி புரிய வைப்பதற்குள் கணவனுக்கு போதும்போதும் என்றாகி விட்டது.

குடும்பத்தில் ஒட்டுக் கேட்பது, வேவு பார்ப்பது மிகமிக கெட்ட பழக்கம்.

ஒருவர் மீது உள்ளபடியாகவே அக்கறை கொண்ட மற்றொருவர், இன்னொருவரிடம் பேசும் போது, சந்தர்ப்ப சூழல்களை அனுசரித்து ஏதாவது எதிர்நிலையாக பேசலாம். அதைப் போய் ஒட்டுக் கேட்டால், அல்லது அதை பெரிதாக நினைத்து ஏதும் முடிவெடுத்தால், நிறைய சிக்கல் தோன்றும்; நிம்மதி போய் விடும். 


ஒட்டுக் கேட்பது நல்லதல்ல. ஒரு குடும்பத்தில் தனது  மனைவிடம் பேச கணவனுக்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கும். அது போல, தனது தாயிடம் ஆத்மார்த்தமாக பகிர்ந்து கொள்ள மகனுக்கு லட்சம் விஷயமிருக்கும். அது போல ஒரு மகள் எந்த சங்கதியானாலும் தனது தாயிடம்தான் முதலில் பகிர்ந்து கொள்வாள். இதை ஒட்டுக் கேட்கும் போது, அவ்வாறு கேட்பவரின் பேர் அதில் அடிபட்டால் அவர் நிம்மதி இழப்பர். அது போல ஒரு அப்பா தனது பிள்ளைகளிடம் தனித்தனியாக பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். அதை மற்ற பிள்ளைகள் ஒட்டுக் கேட்டால், விரிசல். இங்கு கவனிக்க வேண்டியது, உறவின் முக்கியத்துவமே தவிர, உதடுகள் பேசியதை அல்ல. இதை சம்பந்தப்பட்டவர்  உடனடியாக பேசித் தீர்த்து விட்டால் பிரச்சனை இல்லை. இல்லாது போனால், ஒட்டுக் கேட்டவரின் மனதில் பகை எண்ணம் தோன்றும். பழி வாங்கும் மனப்பான்மை மேலோங்கும். தொடர் பிரச்சனை ஆகி விடும்.

அதே நேரத்தில் இங்கே ஒரு 'டிஸ்கிளைமர்' பற்றியும் சொல்லியாக வேண்டும். "நாம் ஒருவருக்கு இன்னது (அதாவது அகட விகடமான, பிரச்சனைக்குரிய செயல்கள்) செய்தால், நம்மை பற்றி, சம்பந்தப்பட்ட அவர் தனக்கு நெருங்கிய மற்றொருவரிடம் என்ன பேசுவார் ...?(நன்றாகவா பேச முடியும்..? முன் எப்போதோ செய்தது கூட தொடர்புபடுத்தி உரையாடல் தொடரும்).. அதற்கு என்ன பதில் வரும்...?(ஆமாமா... அவர்/அவள் அப்படிதான்... என்கிட்டே கூட இப்படி நடந்துகிட்டார்/இப்படி பேசினார்.. என்று அம்மற்றொருவர்  தன பங்குக்கு ஏதாவது பேசி வைப்பார்)...  தவறான விமர்சனம் என்ன வரும்..? அதை எப்படி பயன்படுத்தி கொள்வது.. ? " என்று எண்ணத்தில் திட்டமிட்டு அச்செயலை செய்து, அவ்விருவர் தனியே இருக்கும் போது, 'ரெகார்டிங் டிவைஸ்' ஒளித்து வைத்து அவர்கள் பேசுவதை ரெகார்ட் செய்வது... பின் அதை காட்டி பிளாக் மெயில் செய்வது..." போன்ற கிருமினாளிகளுக்கும் இந்த தலைப்புக்கும் வெகு தூரம்.

எனவே பொதுவாக ஒட்டுக் கேட்டால், ஒட்டுக் கேட்பவர் முதலில் கெட்டுப் போய் விடுவார். இந்த பழக்கம் உள்ளவர் இந்த போகியுடன் போக்கி, வளமாக வாழ வாழ்த்துகள்.

sattaparvai. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக