puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 18 மார்ச், 2013

ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு! – வெளிவராத படங்கள் இணைப்பு!


45470_10151503889479030_631627261_n
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக ‘ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம்’ இன்று காலை சுப வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படுகிறது.

இது வரை வெளிவராத புகைப்படங்களை கீழுள்ள ஸ்லைடரில் NEXT பொத்தானை அழுத்துவதன் மூலம் கண்டு களியுங்கள்.


அம்பாந்தோட்டை மத்தளவில் அமைந்துள்ள இவ்விமான நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதுடன் இலங்கை விமானி ஒருவரினால் செலுத்தப்படும் எயார் அரேபியா விமான சேவைக்குச் சொந்தமான ஜீ 9508 ரக பயணிகள் விமானம் முதல் விமானமாக தரையிறங் குகிறது.
திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்த விமானத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் வருகை தரவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸக்குச் சொந்தமான விமானமும் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி இவ்விமான நிலையத்துக்கு அடிக்கல் நடப்பட்டது. இவ் விமான நிலைய அமைப்புப் பணிகள் 2010ஆம் ஆண்டு முதல் சைனா ஹாபர் பொறியியல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலை யத்தையும் விட 3500 மீற்றர் நீளமும் 75 மீற்றர் அகலமும் கூடுதலாக கொண்டதான ஓடுபாதை இங்கு அமைக் கப்பட்டுள்ளது.
45 மீற்றர் உயரமான கட்டுப்பாட்டுக் கோபுரம் இங்கு அமைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்டமாக அமையவுள்ள ஓடு பாதையில் தரையிறங்கும் விமானங்களையும் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கென 2000 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அம்பாந்தோட்டை மத்தளயில் பெரும் காடாக இருந்த பூமி இன்று சர்வதேச விமான நிலையமாக காட்சியளிக்கிறது. ஓடுபாதைக்குள் யானைகள் உள்நுழையாத வாறு மின்சார வேலிகள் அமைக்கப்பட வுள்ளன.
மத்தள விமான நிலைய திறப்பு விழாவை முன்னிட்டு கடந்த 16ஆம் திகதி முதல் மத அனுஷ்டான வைபவங்கள் ஆரம்பமாகின. இன்று இரவு 9.00 மணிக்கு பிரித் வைபவம் நடைபெறவுள்ளது.
நாளை மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்களில் வரும் வெளிநாட்டு- உள்நாட்டு பயணிகள் அனைவரும் விழாவுக்கு வரும் அதிதிகளாக வரவேற்கப்படுவார்கள்.

tamilcloud thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக