puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 16 மார்ச், 2013

வேடிக்கை வினோதம் - வாழ்க பாரதம்

வேடிக்கை வினோதம் - வாழ்க பாரதம் 

இந்நேரம் - தலையங்கம் .


மண உறவுக்கு அப்பால் , கணவன் மனைவி எனும் உரிமை இன்றி ஆண் பெண் இருபாலரும் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொள்ளுவது இந்தியாவில் சட்டப்படி குற்றமில்லை. 

இப்படி உடலுறவு கொள்ள இப்போது நடைமுறையிலுள்ள வயது வரம்பை 18 வயதிலிருந்து 16 ஆகக் குறைக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கிடையே இந்த மசோதாவுக்கு அமைச்சர் குழு அனுமதி அளித்ததற்கு , பொய்யான பாலியல் புகார்கள் குறையும் என்ற முறையற்ற ஒரு காரணம் முன்வைக்கப் படுகிறது.

ஆனால் பொய்யான பாலியல் புகார்கள் குறையுமா என்பது தான் கேள்விக் குறி. இந்திய அரசு அவசர கதியில் ஒப்புதல் வழங்கிய இந்த மசோதாவால் பல்வேறு சமுதாயச் சீர்கேடுகள் ஏற்படுவதோடு இந்தச்சட்ட மசோதா பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வேலையும் செய்யும்.

அவசர கதியில் ஒப்புதல் தரப் பட்டுள்ள இந்த மசோதாவால் ஏற்படும் முதல் சமுதாயச் சீர்கேடு விபச்சாரத்தின் பெருக்கம். இந்திய திருமணச் சட்டப்படி ஆண்கள் குறைந்த பட்சம் 21 வயதும், பெண்கள் குறைந்த பட்சம் 18 வயதும் பூர்த்தி அடைந்திருந்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். 
18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால் உடலுறவில் மட்டும் ஈடுபடலாம். 

ஒரு அரசாங்கத்தின் எதிர்காலத்தலைமுறைக்கான திட்டமிடலின் நிலை எப்படி உள்ளது?

அரசாங்கமே நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் உடலுறவு கொள்வதில் தவறில்லை என்று கூறி அங்கீகாரமும் வழங்குகிறது என்றால் இதை விடக் கொடுமை என்னவாக இருக்க முடியும்.


அதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்தச் சட்டத் திருத்த மசோதாவால் பள்ளிச் சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் ஆசிரியர்களும், திருமண ஆசை காட்டி உடலுறவு கொள்ளும் காதல்( ? ) மன்னர்களும், பேத்தி வயதில் உள்ள சிறுமிகளைக் கற்பழிக்கும் காமுகத் தாத்தாக்களும் இனி இருவர் சம்மதத்துடனேயே நடைபெற்றது எனக் கூசாமல் வழக்கு விசாரணையில் பொய் சொல்லுவர்.

ஏற்கனவே காவல்துறை அதிகாரிகளும், நீதிபதிகளும் கேட்கும் கேள்விகளால் துவண்டு போகும் பாதிக்கப் பட்டவர்கள் இது போன்ற கேவலங்களையும் சந்திக்க வேண்டுமா எனப் பயந்து புகார் கொடுக்க முன்வரவே தயங்கும் சூழ்நிலையும் ஏற்படும்.

மேலும் இதன் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிகையும் கணிசமாக அதிகரிக்கும். தற்போதைய நிலைப் படி சுமார் 1.2 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஆக்கப் பூர்வமாகச் சிந்தித்தால் திருமண வயதைக் குறைப்பதே சரியான ஒன்றாக இருக்க முடியும். பாலியல் தேவை 16 வயதில் ஆரம்பிக்கிறது என்ற அரசின் வாதம் சரியெனில் திருமண வயதுக்கான குறைந்தபட்ச வயதாக 16வயதை நிர்ணயிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? ஆரம்ப கால கட்டத்தில் திருமணச் சட்டத்தில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், பெண்களுக்கான குறைந்தபட்ச வயது 15 ஆகவுமே இருந்தன.

அதில் தான் திருத்தம் செய்து ஆண்களுக்கான குறைந்த பட்ச வயது 21 ஆகவும் பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் மாற்றப் பட்டது. அரசு நேர்மையைச் சொல்லி தர வேண்டுமே தவிர குறுக்கு வழியில் திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள் என்பதை வலியுறுத்தி வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக் கூடிய தம்பதியினரிடையே ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி விடக் கூடாது.

பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொள்ளும் வயதை 16 ஆகக் குறைத்தால் 10 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவ மாணவியர் கூட சட்டப் படி பாதுகாப்பு பெற்று விடுவர். எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு எங்காவது திருமணம் நடந்தால் ஓடிச் சென்று தடுக்கும் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இனி இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?

இந்தச் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்கும் முன் சமூகவியலாளர்கள் பெண்கள் அமைப்புகள் மற்றும் மனோதத்துவ நிபுணர்கள் மகப்பேறு மருத்துவர்கள் போன்றோரைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும். அந்த நடைமுறை மேற்கொள்ளப் பட்டதா எனத் தெரியவில்லை.

பணத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவது தவறில்லை. தெரு, கடை வீதிகளில் நின்று கொண்டு அழைப்பதும் விபச்சாரத் தரகராக செயல்படுவதும் விபச்சார விடுதி நடத்துவதும் குற்றம்.18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி தவறு. ஆனால் இருவர் மனமொத்து ஈடுபடும் உடலுறவு சட்டப் படி குற்றமில்லை.

வேடிக்கையாகவும் விநோதமாகவும் சட்டங்களை இயற்றுவதில் நமக்கு நிகர் நாமே தான்.

வாழ்க பாரதம்.


தலையங்கம் at www.inneram.com  thanks



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக