puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 21 மார்ச், 2013

இலங்கை தாக்குதல் நடத்துவதை நிறுத்த முதல்வர் கடிதம்



இலங்கை தாக்குதல் நடத்துவதை நிறுத்த முதல்வர் பிரதமருக்கு கடிதம்.
 1/1 
சென்னை, மார்ச்.21 - தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு:-

தமிழ் நாட்டின் பாக் ஜலசந்தி பகுதியில் மார்ச் 19-ம் தேதியும், 20-ம் தேதி காலை நேரத்திலும் 3 படகுகளில் மீன் பிடிக்கச்சென்ற தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதல் குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். முதல் நிகழ்ச்சியில் மார்ச் 19-ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்கள் வல்லம் படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் இரும்புக் குழாய்களால் தாக்கியுள்ளனர். மார்ச் 20-ம் தேதி காலை நேரத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகரை சேர்ந்த 6 மீனவர்கள் ஒரு பிளாஸ்டிக் படகில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்களை இலங்கை கடற்படையினர் கத்திகளை கொண்டு தாக்கியதில் 4 மீனவர்கள் கை, கால்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் கொலைவெறி தாக்குதல்களை மிகவும் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்க வேண்டும். தமிழக அரசின் பல வற்புறுத்தல்களுக்குப் பிறகு இந்திய அரசு எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. இது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் கொடூரமான, சகிக்க முடியாத பயங்கர தாக்குதல்களை விட மோசமானதாகும். கத்திகளையும், இரும்பு குழாய்களையும் கொண்டு மீனவர்களை தாக்கும் சமீபத்திய தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமாகும். இந்திய குடிமக்களாகிய தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் மீண்டும், மீண்டும் மோசமாக நாகரீகமற்ற முறையில் தாக்குதல் நடத்துவதை இந்தியா பொறுமையுடன் சகிக்கக்கூடாது. 
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கை ராணுவத்தின் மோசமான தாக்குதல்கள் மற்றும்  சட்டத்துக்குப் புறம்பான கைது ஆகியவை உண்மையில் மிகவும் வருத்தத்திற்குரியது என்பதை வேதனையுடன் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த மார்ச் 14-ம் தேதி நான் உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த பிறகும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 19 மீனவர்கள் இலங்கையில் இன்னமும் நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இத்தகைய மோசமான தாக்குதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

thinaboomi thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக