puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 17 மார்ச், 2013

வாணியம்பாடி: பணத்துக்காக மாணவனைக் கடத்தி கொலை செய்த அவரது நண்பர்கள் 7 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.


பணத்துக்காக +2 மாணவனைக் கொலை செய்த நண்பர்கள் கைது!வாணியம்பாடி: பணத்துக்காக மாணவனைக் கடத்தி கொலை செய்த அவரது நண்பர்கள் 7 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பூக்கடை பஜார் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் மணீஷ் (வயது 17) கடந்த மாதம் 23-ம் தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வாணியம்பாடி டவுன் காவல்துறையிடம் மணீஷின் தந்தை ரமேஷ் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்கு பதிந்து மணீஷை தேடிவந்தனர்.


இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது தந்தைக்கு வந்த தொலைபேசி மிரட்டலின் பேரில்  செல்போன் டவர் மூலம், எங்கிருந்து மிரட்டல் போன் வந்தது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். உடன் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், வாணியம்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெகன் (21) என்பவரைக் கைது செய்து விசாரித்ததில், அவன் மணீஷின் நண்பன் என்பதும் மணிஷின் ஆடம்பரமான வாழ்க்கையை பார்த்து பணம் பறிக்க திட்டமிட்டு கடத்தி சென்றதாகவும். அது முடியாமல் போகவே மணீஷை கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டான். இவன் கொடுத்த தகவலில் அடிப்படையில்,இந்த கொலையில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த சிராஜ், லோகேஷ், அரவிந்தன், தரணி, மவுலிராஜன், ராயல் அகமது ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மாணவர் மணீஷை கொலை செய்து புதைத்தாக கைது செய்யப் பட்டவர்கள் கூறியதன் அடிப்படையில் புதைக்கப் பட்ட சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மாணவன் படுகொலை சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக