puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 3 மார்ச், 2013

இரு நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கிய மாணவன் பேசக் கூட முடியாத நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதினார்!

 மார்ச், 2013, ]
இரு நாட்களுக்கு முன் விபத்தி��
விபத்தில் சிக்கி, உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், மனஉறுதியுடன் பிளஸ் 2 தேர்வு எழுதினார், தேனி மாணவர் தனசேகரன். தேனி அருகே முத்துதேவன்பட்டியைசேர்ந்த இவர், மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறார்.

நேற்று முன்தினம் காலை, நண்பர்களுடன் அங்குள்ள கண்மாய் கரைக்கு சென்றார். அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து செயல் இழந்தவரை, நண்பர்கள் காப்பாற்றினர்.

தனசேகரனுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு கை, கால்கள் செயல் இழந்தன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனசேகரன், "பிளஸ் 2 தேர்வை எழுத முடியாது' என, டாக்டர்கள் கை விரித்தனர்.

தேர்வு எழுத வேண்டும், என்ற உறுதியுடன் தனசேகரன் இருந்தார். உடல் நிலைமையை விளக்கி, அவர் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டது.

தனசேகரன் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கப்பட்டு, ஆசிரியர் நியமிக்கப்பட்டார். நேற்று காலை, அவரை தேர்வறைக்கு அழைத்துச் சென்றனர்.

பேசக்கூட முடியாத நிலையில் இருந்த தனசேகரன், சிரமப்பட்டு பதில் சொல்ல, ஆசிரியர் மகேஸ்வரன் தேர்வு எழுதினார்.

தேர்வு எழுதி முடித்த பின், அவர் கூறுகையில், ""சிகிச்சை பெற்றுக்கொண்டே அனைத்து தேர்வுகளையும் எழுத முடியும்,'' என, மன உறுதியுடன் தெரிவித்தார். 

viyapu thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக