Saturday, 09 February 2013 10:27

சர்ச்சைக்குரிய திரைப்படங்களுக்கு கொடுக்கப்பட்ட சென்சார் சான்றிதழை மாற்றுவது குறித்து தணிக்கை குழு தவிர வேறு அமைப்பிடம் முறையீடு செய்வதற்கு வழி உண்டா என்பது குறித்து, விளக்கம் அளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
துப்பாக்கி படத்துக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த நோட்டீசை உயர்நீதிமன்றம் அனுப்பியுள்ளது.
நடிகர் கமல் நடித்த விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருந்ததாகக் கூறி, அப்படத்தை வெளியிடுவதற்கு தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுத் தொடர்பான வழக்கில் தணிக்கை செய்யப்பட ஒரு படத்துக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்கிற கேள்வி எழுந்தது.
இதன் இடையே நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்திலும் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி, அப்துல் ரஹீம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த படத்துக்கு வழங்கப்பட்ட யூ சான்றிதழை திரும்பப்பெற தணிக்கை குழுவினருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் ஆர் பானுமதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தணிக்கை செய்யப்பட ஒரு படத்துக்கு வழங்கப்பட்ட சான்றிதழை மாற்றுவது குறித்து 3 வது நபர் முறையீடு செய்வதற்கு சினிமாட்டோகிராப் சட்டத்தில் இடமில்லை என வாதிடப்பட்டது.
இந்த சூழலில் சர்ச்சைக்குரிய படங்களுக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை மீண்டும் பரிசீலிப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், தணிக்கை குழுத் தவிர வேறு எந்த ஒரு அமைப்பிடமும் உள்ளதா என்பது குறித்து, மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் மார்ச் 1ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக