puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 14 பிப்ரவரி, 2013

மத்தால ராஜபக்ச விமான நிலையம் திறப்பு: ஓடிஒளியும் இந்திய விமான நிறுவனங்கள்!


on 14 February 2013.

சிறிலங்காவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தால ராஜபக்ச விமான நிலையத்தின் ஊடாக வரும் மார்ச் 18-ம் திகதி தொடக்கம் விமானப் போக்குவரத்து ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

எனினும், சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் ஊடாக சேவை நடத்த அனைத்துலக நிறுவனங்கள் குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மத்தால சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக விமான சேவைகளை நடத்த சர்வதேச விமான நிறுவனங்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.


எமிரேட்ஸ், கட்டார் எயர்வேஸ், எடிஹாட், எயர் அரேபியா, சீனாவின் சிசுவான் எயர்லைன்ஸ், கொரியன் எயர்லைன்ஸ், போன்றன மத்தாலவுக்கு சேவை நடத்த இணங்கியிருந்தன. எனினும் அவை உடனடியாக சேவைகளை ஆரம்பிக்கத் தயாராக இல்லை. இதனால், சிறிலங்கா அரசாங்கம் இந்த நிறுவனங்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது.


அதேவேளை, இந்தியாவின் எந்தவொரு விமானசேவை நிறுவனமும், மத்தால விமான நிலையத்தின் ஊடாக சேவையை நடத்த முன்வரவில்லை. இந்தியாவில் இருந்தே சிறிலங்காவுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்ற நிலையில், இந்திய விமான நிறுவனங்கள் மத்தால விமான நிலையத்தைப் புறக்கணிப்பது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கட்டுநாயக்கவுக்கும், இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கும் இடையில் எயர் இந்தியா, ஜெட் எயர்வேய்ஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகிய நிறுவனங்கள் விமானசேவைளை நடத்தி வருகின்றன. ஹம்பாந்தோட்டை, மத்தாலவில் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்ட கட்டுமானப் பணிகளை சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் 209 மில்லியன் டொலர் செலவில் கட்டிமுடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

eutamilar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக