puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 11 பிப்ரவரி, 2013

சிறிலங்கா அபாயத்தை சந்திக்க நேரிடும் - இந்தியா எச்சரிக்கை!


on 11 February 2013.

சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகளை மதிக்க தவறும் பட்சத்தில், அந்நாட்டுக்கு எதிராக செயற்பட நேரிடும் என இந்தியா அறிவித்துள்ளது. மனிதஉரிமைகள் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகளை சிறிலங்கா மதிக்கத் தவறினால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரப்படும் எத்தகைய தீர்மானத்தையும்...

இந்தியா ஆதரிக்கும் மத்திய அரசாங்க அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கூட்டத்தொடர் அமர்வுகளின் போது சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவினால் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதை இந்தியா ஆதரித்தது.


மனிதஉரிமைகள் தொடர்பான ஐ.நாவின் பரிந்துரைகளை சிறிலங்கா மதிக்கத் தவறினால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீளவும் அந்த நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்படும் எத்தகைய தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும். மத்திய அரசு எப்போதும் சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் நலனைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது.


அவர்களுக்கு ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தன உடன்பாட்டின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை, இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்து வருகிறார். தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. சில தமிழ்க்கட்சிகள், தமிழ்நாடு அரசாங்கம் போன்றன முன்யோசனையின்றி தீர்மானம் நிறைவேற்றியது போலன்றி, இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்தது அதனால் தான்.


சிறிலங்கா பிரச்சினையை இந்திய அரசு நாசூக்காகவே கையாள வேண்டிய தேவை உள்ளதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கூறுவதுபோல், சிறிலங்கா மீது பொருளாதார தடை விதித்து அவர்களை விரோதித்து கொண்டால், அங்குள்ள தமிழர்களுக்கு நம்மால் உதவி செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

eutamilar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக