puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 9 பிப்ரவரி, 2013

வயதான பெற்றோர்கள் பாரமா...? பாவமா..?



உங்களுக்குப் பிடித்தவர்கள் யார் எனக்கேட்டால் முதன் முதலாய் கைகாட்டி நிற்பது பெற்றவர்களைக் காட்டித்தான்.. அதெல்லாம் அவர்கள் கைப்பிடித்து நடைப்பழகி நடக்கும் வரைதான். ஒரு காலகட்டம் வரைக்கும்தான். பிறகு வயதாக வயதாக, வாலிபம் பெருக.. வாலிபம் பெருக...பிடித்தவர்களின் பட்டியலில் அவர்களின் பெயரும் இருக்கும். ஒரு சிலருக்கு அந்தப்பட்டியலில் பெற்றோரும் பெயரும் இருக்காது.

(பதிவைப் படிக்கும் நண்பர்கள் பதிவின் இறுதியில் கீழிருக்கும் காணொளியைக் காணத் தவறாதீர்கள்...)

aging parents

தன்னைக் கட்டிக்காத்து கண்ணின் மணியென வளர்த்த பெற்றோர்கள் வயதானவுடனேயே பாரமாகப் போய்விடுகின்றனர். அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்ய முகம் சுழிக்கிறார்கள். ஒரு சிலர் நேராகவே முகத்தலடித்தாற்போன்று 'பட்' டென சொல்லிவிடுகிறார்கள். "சனியனே.. ஏன் என் உயிரை வாங்கறே.. எங்கேயாவது போய்த்தொலையேன்...." என கூறுபவர்களும் உண்டு.

"செத்துத் தொலையேன்.. நீயெல்லாம் உயிரோட இருந்து என்ன சாதிக்கப்போற..." பத்துமாதம் சுமந்து பெத்த தாய்க்கு கிடைக்கும் வசவுகள் இவை. எத்தனை கடினமான வார்த்தைகள் பாருங்கள்..

ஒரு சிலர் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறார்கள். ஒரு சிலர் அனாதையாக திரிய வைத்துவிடுகிறார்கள். இப்படியும் பிள்ளைகள் இருக்கிறார்களா? என்றால் நிச்சயம் இருக்கிறார்கள்.

பாசத்துடன் வளர்த்து , நல்ல பதவியில், நல்ல வேலையில், நல்ல நிலையில் அமர்த்தும் அவர்களை சிலர் மறந்துவிடுவதுதான் கொடூரத்திலும் கொடூரம்...

ஒரு விஷயத்தை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். "நமக்கும் வயதாகும்... என்றாவது ஒரு நாள் இப்படிப்பட்ட சூழ்நிலையை நாமும் சந்திக்கப்போகிறோம்" என்பதே அது.

aging parents

கிராமத்தில் ஒரு கதை சொல்வார்கள்..

வயதான மாமனாருக்கு மருமகள் ஒரு உடைந்த சட்டிப்பானையில் கூழ் ஊற்றிக்கொடுப்பாளாம். தினந்தோறும் அதை கவனித்த மகன் ஏம்மா தாத்தாவுக்கு நல்ல பாத்திரத்தில் ஊற்றிக்கொடுக்கக்கூடாதா? வீட்டிலேயே தங்க அனுமதிக்கலாமே...? என்று கேட்டானாம். 


அதற்கு மருமகள்.. "உனக்கு ஒன்னும் தெரியாது போடா.. வயசான கிழத்துக்கு இதுவே அதிகம்.. கூழ் ஊத்தாம, தங்க இடம் கொடுக்காம பக்கத்து வீட்டுக்காரி அவளோட மாமனாரை துரத்தியே விட்டுட்டா தெரியுமா?" என்று அவனை அதட்டினாளாம்.


காலம் கடந்தது. பெரியவர் இறந்துவிட்டார். வீட்டை சுத்தம் செய்தார்கள். அந்த சிறுவன் மறக்காமல் அந்த சட்டியை எடுத்து வைத்துக்கொண்டாம்...


'டேய் அது பழைய பானைச் சட்டிடா .. அது உனக்கெதுக்கு...? என அவளுடைய தாயார் கேட்டாளாம்..


அவன் அதற்கு சொன்னானாம்.. நாளைக்கு உங்களுக்கு இது தேவைப்படுமே... அதனால்தான் எடுத்து வைக்கிறேன். என பரண் மீது பானைச் சட்டியை எடுத்து வைத்தானாம்..


இந்த கதை எதற்கென்றால்.. நாமும் அதுபோல் வயதானவர்களாக மாறுவோம்.. நமக்கும் முடியாமல் போகும் நாள் வரும்.. என்பதை உணர்த்ததான்..

இதில் ஆண்கள் மட்டுமல்ல.. வீட்டிற்கு விளக்கேற்ற வரும் மருமகள்களின் பங்கும் உண்டு.(நல்ல குணமுள்ள மருமகள் மன்னிக்க..). இந்த வரிசையில் ஒரு சில மகள்களும் சேர்ந்து இருக்கிறார்கள் தற்காலத்தில்....

மாமியார் மருமகள் ஒற்றுமை என்பது கிஞ்சித்தும் இருக்காது. எப்போதும் எலியும் பூனையுமாக இருப்பார்கள். இவர்களின் பிரச்னையை தீர்ப்பதிலேயே கணவன்மார்களின் காலம் கழிந்துவிடும். ஒரு சில நேரம் அனுசரித்துப்போகும் மாமியார் மருமகளும் இருக்கிறார்கள். ஆனால் உள்ளுக்குள் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருக்கும். இவர்களின் பனிப்போர் என்றுமே முடிவுக்கு வருவது கிடையாது.

இது நூறுசதவிகித உண்மை.. பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதை இவ்விஷயத்தில் நூறு சதிவிகிதம் பொருந்தும்.

இப்படி மகன், மருமகள், மகள் என தன்னுடன் வந்த உறவுகளாலேயே பெரும்பாலான பெற்றோர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் மனநிலையை, வயதான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்து தனது கடமையை ஆற்றுபவர்கள் ஒரு சில பகுதியினராகவே உள்ளனர்.

மேலும் பெற்றொரைப் பார்த்துக் கொள்வதில், மகன்கள் தங்களது மனைவியரின் பேச்சைக் கொண்டுக் கொண்டு, இவ்வாறு உதாசீனப்படுத்துவது, அலட்சியப்படுத்துவது, ஒருவர் வீட்டிலிருந்து மற்றவர் விட்டிற்கு அலையவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது நடுத்தர குடும்பங்கள் முதல் வசதியான குடும்பங்கள் வரையிலும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்களுக்கு ஒன்று ஒன்றுக்கு மேற்பட்ட மகன்கள் இருந்தால்.. சொல்லவே வேண்டாம்..

aging parents

மகன்கள் ஒவ்வொருவரும் ஏன்.. அவன் வீட்டில் பார்த்துக்கொள்ளக்கூடாது. இவன் வீட்டில் ஏன் அவர்களைப் பார்த்துக்கொள்ளக்கூடாது என்றப் போட்டியிலேயே அவர்கள் மனம் உடைந்து போய்விடுகின்றனர்.

இறுதியில் மகள்கள் யாராவது ஒருவர் வீட்டில் தங்கி தங்கள் கடைசிக் காலத்தை கழிக்கும் பெற்றோர்களும் இருக்கின்றனர்.

மகள் இல்லாத பெற்றோர்கள் அவர்களுக்கு ஏற்றமாதிரி முடிவெடுத்துக்கொள்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடுவது, அல்லது தற்கொலை செய்துகொள்வது... இப்படி பட்டியல் நீள்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம். பெற்றோர்களின் அன்பை, அரவணைப்பையும் பிள்ளைகள் நினைத்துப் பார்க்காததுதான்.

இவ்வாறு இல்லாமல் ஒரு சில இடங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட வாரிசுகளைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் 'ஒரு மாதம் இங்கே.. அடுத்த மாதம் அங்கே...' என ஒவ்வொரு மாதமும் மாறி மாறித் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களின் பாடு அதைவிட திண்டாட்டம்..

நண்பர் அருண் பழனியப்பன் அவர்கள் google + -ல் பகிர்ந்து மனதை நெகிழ வைத்த காணொளி என்ற தலைப்பில் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார்.. ஓரிரு நிமிடங்களே ஓடும் இந்த காணொளியைக் காணுங்கள்.. வயதான பெற்றோர்கள் நமக்கு பாரமில்லை என்பதை உணர்த்தும்.

காணொளியில் வயதான தந்தையும் மகனும் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு சிட்டுக்குருவி ஒன்று செடிகளின் மீது வந்தமர்கிறது.. பார்வை மங்கிப்போன அவர் 'அதென்ன?' என கேட்கிறார். மகனும் பதில் சொல்கிறார். மீண்டும் சிட்டுக்குருவி.. மீண்டும் 'அதென்ன' என கேட்கிறார். மகன் மீண்டும் கொஞ்சம் அதட்டலாக சிட்டுக்குருவி என்கிறார். சிட்டுக்குருவி மேலே பறந்து சென்று மரத்தின் மீது அமர்கிறது.மீண்டும் 'அதென்ன' எனக்கேட்கிறார். மகன் பொறுமை இழந்து 'சத்தம் போடுகிறார். மகனை சத்தத்தை தடுத்து நிறுத்திவிட்டு வீட்டின் உள்ளே சென்று ஒரு பழைய டைரியை எடுத்துவருகிறார்.. அதை மகனிடம் படிக்கக் கொடுக்கிறார். அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்று நீங்களே காணொளியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்களேன்..



இவ்வாறு பாசத்தோடும், பரிவோடும், புரிந்துணர்வோடும் வளர்த்து ஆளாக்கிவிட்ட பெற்றோர்களைத் தவறாமல் கண்ணின் இமைபோல் காப்பது நமது கடமையல்லவா..? இந்த வீடியோவைப் பார்த்தவுடன் உணர்ச்சிப் பெருக்கில் எழுதிய இந்த பதிவிற்கு மூலகாரணம் நண்பர் திரு. அருண்பழனியப்பன் அவர்கள். நன்றி அருண்...!

இணையத்தில் கிடைத்த ஓர் அற்புதமான கவிதை.. அப்பாவின் பாசத்தை, அப்பாவின் உழைப்பை, அப்பாவின் அன்பை பிரதிபலிக்கும் கவிதை...


அன்புள்ள அப்பாவுக்கு,
ஆசை மகனின் அன்புக் கடிதம்.

இங்கு குளிரூட்டப்பட்ட அறை
கணிப்பொறி பணி எனினும்
நீ உழுத கரிசல்காட்டின்
மணமின்னும் மறக்கவில்லை.

ஏர்பிடித்துக் காய்த்துப்போன
உன் கரங்கள்
இன்னும் என் கைப்பிடியில்
என்னை வழிநடத்தி..

வெயில் மழையில் நீ நனைந்த காட்சிகள்
இன்னும் பொம்மலாட்டங்களாய்
என் கடைக்கண்ணில்..

நான் ஏற முதுகு தந்தாய்,
வறுமையென்னும் கிணற்றிலிருந்து!
நான் எங்கும் நகர்வதில்லை,
உன் கைபற்றாமல்..

கூலிகளாய் தொடர்ந்துவந்த
தலைமுறைகள்..
மாறியது என்னில்,
மாற்றியவன் நீ.

எனக்குத் தெரியும்!
உன் ஒருவேளை கஞ்சியும்
என் பள்ளி நோட்டுகள்.

விடைகொடு அப்பா,
ஏருக்கும் கலப்பைக்கும்.
புறப்படு, இனி உலகம் சுற்றலாம்.

அறுவடைகள் ஆனந்தம்,
உந்தன் மொழிகளில்
இன்று அறுவடைக்குத் தயாராய்
நீ வளர்த்த பயிர்!

நிரப்பி வை,
மகிழ்ச்சி மட்டும்,
களம் முழுவதும்.

பட்டணத்தின் பகட்டுக்கே
விழிவிரிக்கும் உன்னை,
நான் அழைத்துச் செல்கிறேன்,
உலகின் அதிசயம் காண!

வானில் புள்ளியாய்
நீ கண்ட விமானங்கள்
உனை ஏற்றிப் பறக்கையிலே
நீ மகிழ ரசிக்க வேண்டும்.

கண்காணா தெய்வத்திற்கு
கன்னங்கள் கிழிக்கின்றான்!
கண்முன்னே தெய்வம்,
செருப்பாய் நான் ஆனால் என்ன?

எப்பொழுதும் கேட்டிருப்பேன்,
"காணி நிலம் உழுகாமல்
தின்ன சோறு செரிப்பதில்லை"

இப்பொழுது சொல்கிறேன்,
உனை கூட்டிப் பறக்காமல்
நான் சோறு தின்பதில்லை!

நன்றி நண்பர்களே...!!!

பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

thangampalani. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக