puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 20 பிப்ரவரி, 2013

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்



E-mail Print PDF
மமக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம்
மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் 19.02.2013 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., ப. அப்துல் சமது, எம். தமிமுன் அன்சாரி, குணங்குடி ஆர்.எம்.அனிபா, எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, கோவை இ. உமர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

தீர்மானம் 1
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அறிவிக்கக்கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருந்த சர்வோதயா இயக்கத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு 21வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். அவரை உடனடியாக விடுதலை செய்து, அவர் மீதான அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும் என்றும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை இந்த உயர்நிலைக் குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2
வீரப்பன் கூட்டாளிகள் என்று கருதப்படும் மாதையன், ஞானபிரகாசம், பிலவேந்திரன், சைமன் ஆகியோர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்த உயர்நிலைக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3
தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை, ஆயுள் தண்டனையை அனுபவித்த முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறைவாசிகளையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இந்த உயர்நிலைக்குழு வலியுறுத்துகிறது.
Last Updated ( Wednesday, 20 February 2013 12:12 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக