- Monday, 04 February 2013 01:21

பாலியல் குற்றங்களுக்கு எதிராக நீதிபதி வர்மா குழுவினர் பரிந்துரைத்த யோசனைகள் அடங்கிய புதிய சட்டத்திருத்தங்களை உடனடியாக அமல்படுத்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவை, எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக அமலுக்கு வரவுள்ளது.
பெண் ஒருவர் உயிரிழக்கும் அல்லது சுயநினைவை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளும் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு மரணதண்டனை விதிக்கவும், ஏனைய பாலியல் தாக்குதல்களுக்கும், அசிட் தாக்குதல்களுக்கும் குறைந்தது 20 வருடங்கள் முதல் - ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கவும் புதிய சட்டத்திருத்தம் வகை செய்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சின் ஒப்புதலை இப்புதிய பரிந்துரைகள் பெற்றிருந்தன. தற்போது குடியரசு தலைவரின் ஒப்புதலும் விரைவாக பெறப்பட்டிருப்பதால், எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளன.
எனினும் திருமணத்தின் பின்னரான கட்டாய பாலியல் பலாத்காரத்தை ஒரு பாலியல் குற்றமாக கருதாமை, அரச உயரதிகாரிகள், கீழ்மட்ட உயரதிகாரிகளின் பாலியல் தாக்குதல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் பதியப்படாமை, இராணுவ, ஆயுத படைகளின் பாலியல் பலாத்கார தாக்குதல்கள் என்பவை தொடர்பில் எந்தவொரு சட்டச்சீருத்தமும் செய்யப்படவில்லை என பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக