கோலாலம்பூர்,
பிப்-6
உலு
லங்காட்டில் ஜனவரி 23ம் தேதி பாதுகாவலரான சி சுகுமார் மரணமடைந்தது உட்பட
எல்லா “திடீர் மரணங்களையும்”
கொலைகள் என புலனாய்வு செய்யுமாறு முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான்
போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“திடீர் மரணம்’ சம்பந்தப்பட்ட
விவகாரங்களில் நடத்தப்படும் புலனாய்வு கொலையைப் போன்றதாகவே இருக்க வேண்டும்,” என
சுகுமார் பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அவர்
சொன்னார். சுகுமார், போலீஸ்காரர்களினால்
தடுக்கப்பட்டு கைவிலங்கு மாட்டப்பட்ட பின்னர் அடிக்கப்பட்டதால் மரணமடைந்தார் எனச்
சொல்லப்படுகின்றது.
அவரது மரணத்தில் தாங்கள்
சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர். அந்த விவகாரம்
தொடர்பில் மரண விசாரணையை நடத்தப் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரது இருதயத்தில் ஏற்பட்ட
அடைப்பு” மரணத்துக்குக் காரணம் சவப் பரிசோதனை முடிவுகள் காட்டியுள்ளன. மரணத்துக்கான காரணத்தை உறுதி
செய்ய முடியாத போது தான் மரண விசாரணை நடத்தப்படும் என்பதை மூசா சுட்டிக்
காட்டினார்.
“என்ன நிகழ்ந்தது என்பது
நிச்சயமாகத் தெரியாவிட்டால் நடைமுறைகளுக்கு இணங்க மரண விசாரணை நடத்தப்படும்.
ஏனெனில் அப்போது தான் தவறுகள் ஏதும் நிகழ்ந்துள்ளதா என்பதையும் அதற்கு
பொறுப்பானவர்களையும் அடையாளம் காண்பதற்கும் மாஜிஸ்திரேட் ஆதாரங்களைப் பெற
முடியும்.”
“உங்களுக்கு நிச்சயமாகத்
தெரியாவிட்டால் நீங்கள் அதனைக் கொலை என வெறுமனே சொல்லக் கூடாது.” பெட்டாலிங் ஜெயாவில் மூசா
தாம் புரவலராக இருக்கும் மை வாட்ச் (MyWatch) என்ற அரசு சாரா அமைப்பின் நிருபர்கள்
சந்திப்பில் பேசினார்.
vanakkammalaysia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக