- Monday, 18 February 2013 15:36

மாலைதீவில் இந்திய தூதரகத்தில் அரசியல் தஞ்சமடைந்திருக்கும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் நஷீத்தை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாலைத்தீவில் கம்யூனிஸ்டு ஆட்சிக்கு பிறகு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகம்மது நஷீத். எனினும் ஒரு சர்ச்சையில் அந்நாட்டின் தலைமை நீதிபதியையே கைது செய்ய உத்தரவிட்டதால் முகம்மது நஷீத் பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டது. அவ்வழக்கில் நஷீத்துக்கு எதிராக கைது ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அங்குள்ள இந்திய தூதரகத்தில் நஷீத் அரசியல் அகதியாக தஞ்சம் புகுந்தார். அவருடன் ஆதரவு எம்.பிக்கள் 12 பேரும் தஞ்சமடைந்தனர். இதை தொடர்ந்து இரு நாடுகளிடையே உறவில் பெரும் விரிசல் வீழ்ந்திருக்கிறது. மாலைத்தீவுக்கான இந்திய தூதுவரை நேரில் வரவழைத்து மாலைதீவு அரசு கடும் கண்டனம் விடுத்திருந்தது.
இந்நிலையில் கடந்த 6 நாட்களாக இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்திருக்கும் நஷீத்தை கைது செய்து, எதிர்வரும் புதன்கிழமை மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக அந்நாட்டின் காவல்துறை செய்தி தொடர்பாளர் ஹசன் ஹனீப் தெரிவித்துள்ளார். இருப்பினும் சர்வதேச விதிகளை பின்பற்ற வேண்டியிருப்பதால் இந்திய தூதரகத்திற்குள் நாங்கள் நுழைய போவதில்லை எனவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நிதிமன்றத்தில் நஷீட் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் மாலைதீவு அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட போகும் வாய்ப்பை இழப்பார். தான் துப்பாக்கி முனையில் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டே பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டதாக நஷீட் தெரிவித்திருந்தார்.
4tamilmedia. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக