
சர்வதேச ஊடகங்ககுக்கும் முஸ்லிம் ஊடகவியளர்களும் மஹரகம
பொது பல சேனா கூட்டத்தில் அச்சுறுத்தல் விடுக்கப் பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற
குறித்த கூட்டத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற சர்வதேச செய்தி நிறுவனமான
பி.பி.சியின் ஊடகவியலாளர் சார்ள்ஸ் ஹெலிலேண்ட்
அவரது உதவியாளர் அஸாம் அமீன் மற்றும் அந்த செய்திச்
சேவையின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை சிலர் சுற்றிவளைத்து தாக்குவதற்கு
முயற்சித்துள்ளனர்.
அதேவேளை நவமணி பத்திரிகைக்காக செய்தி சேகரிக்கச்
சென்ற முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்ட நிலையில் மஹரகம பொலிஸில்
நான்கு மணிநேரம் தடுத்து தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.