puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 7 பிப்ரவரி, 2013

கோவை மமக மாநாட்டு தீர்மானங்கள்



E-mail Print PDF
1. இட ஒதுக்கீடு
அ) தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்தித் தரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தருமாறு இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

ஆ) இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு 15 சதவீத இட ஓதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் அறிக்கை அறிவுறுத்துகிறது. இந்த அளவுப்படி உடனே இட ஓதுக்கீடு வழங்கி அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிட உடனே மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
2. பூரண மது விலக்கு
தமிழகத்தில் 2 கோடி பேர் மது விரும்பிகளாக மாறி விட்டனர். பல்வேறு குற்றச் செயல் களுக்கும் சாலை விபத்துக்களுக்கும் மதுவே காரணம் என்ற நிலையில் இனியும் மதுக் கடைகள் நீடிப்பது நியாயமில்லை. எனவே தமிழக அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் முழு மது விலக்கை உடனே அமுல்படுத்த வேண்டுமாய் இம் மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
3. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு
சில்லறை வணிகத்தில் 51 சதவீத அந்நிய முதலீடு செய்ய வழிவகை செய்த மத்திய அரசை இம்மாநாடு கண்டிக்கிறது. இந்தியாவில் வாழும் வணிகம் சார்ந்த 20 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் இந்த அந்நிய முதலீடு தீர்மானத்தை உடனே வாபஸ் பெறவேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதுடன் தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம் கட்டிவரும் விற்பனைக் கூடத்தை உடனே தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை இம் மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
4. லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக லோக் பால் மசோதா
இந்தியா முழுவதும் லஞ்சம் மற்றும் ஊழல் தலை விரித்தாடும் சூழலில் லஞ்சம், ஊழலுக்கு எதிரான உறுதியான லோக்பால் மசோதாவை நடப்பு பாராளுமன்றக் கூட்ட தொடரிலேயே நிறைவேற்றிட வேண்டும் என மத்திய அரசை இம் மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
5. தடையில்லா மின்சாரம்
அ) பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுப்பது போல் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் மின்சாரம் வழங்கி உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உற்பத்தி அதிகரிப்புக்கும் ஆவன செய்ய வேண்டும் என இம் மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
ஆ) தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு சிறு தொழில் நசிந்து போய் விட்டது. தமிழ்நாடு முழுவதும் இருளில் மூழ்கித் தவிக்கும் நிலை. தற்போது சீராக உள்ளது போல் இருந்தாலும் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மின் உற்பத்திக்கு வழிசெய்து தமிழகத்தை மின் தட்டுப்பாட்டில் இருந்து காப்பாற்ற வேண்டுமென இம் மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
6. சிறைவாசி விடுதலை
அ) ஆயுள் தண்டனைப் பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறைகளில் வாழும் சிறைக் கைதிகளை அவர்களின் குடும்பத்தினர் நலன் கருதி தமிழக முதல்வர் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என இம் மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
ஆ) மேலும் இரண்டு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் கோவை சிறைவாசி அபுதாகிரை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள உடனே ஜாமீனில் விடுவிக்க ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசை இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
7. முதல்வருக்கு நன்றி
விஸ்வரூபம் திரைப்படத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் என்ற சிறுபான்மை மக்களின் கோரிக்கையை சமூகப் பொறுப்புணர்வுடன் ஏற்று, முதலில் தடை செய்து பிறகு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உதவிய மாண்புமிகு தமிழக முதல் வருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
8. தமிழ் ஈழத்திற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
தமிழீழ விடுதலையைத் தடுக்கும் வகையில் தமிழீழ படுகொலையை இலங்கை அரசு செய்து முடிக்கும் வகையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை செய்த ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் பான்&கி&-மூன், விஜய் நம்பியார், ஜான் ஹோம்லஸ் உள்ளடங்கிய அதிகாரிகள் குழுவின் செயல்பாடுகள் பற்றிய ஆதாரங்களை ஐ.நா.வின் உள்ளக அறிக்கை குழு சார்லஸ் பெட்ரியின் தலைமையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இவர்கள் மீது ‘‘போர்க் குற்றத்திற்கு துணை செய்தது’’ என்கிற அடிப்படையில் குற்றச்சாட்டும் விசாரணையும் நடத்தப்பட வேண்டும். பான்&கி&-மூன் தடுத்து வைத்துள்ள இலங்கை மீதான சுதந்திரமான சர்வதேச விசாரணையை உடனடியாகத் துவங்கவும், ஐ.நா.வின் பொது விதிப்படி தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பினை நடத்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என இம் மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
9. சாதி மத கலவரங்களுக்கு கண்டனம்
தருமபுரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தில் அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக வாழவும், சாதி மத வெறியைத் தூண்டும் தீய சக்திகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
10. கோவை வளர்ச்சிப் பணிகள்
கடந்த திமுக ஆட்சியில் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட கோவை தெற்கு பகுதியில் அதிமுக அரசு வளர்ச்சிப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 87, 95, 75வது வார்டு பகுதிகளை அதிகாரிகள் திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர். ஆகவே பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
11. மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
கோவையில் போக்குவரத்து நெருக்கடியால் அதிகப்படியாக தெற்கு பகுதி குறிப்பாக உக்கடம் முதல் ஆத்துப்பலம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் கடப்பதற்கு அரை மணி நேரம் ஆகிறது. இதற்கு முக்கியக் காரணம் உக்கடத்தில் இருந்து ஆத்துப்பலம் வரைக்கும் மேம்பாலம் கட்டுவது கிடப்பில் போடப்பட்டது தான். மேலும் போத்தனூர் ராமநாதபுரம் நஞ்சுண்ட புறத்தில் ரயில்வே கிராசிங் மேம்பாலப் பணிகள் ஐந்து ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. இந்த இரண்டு மேம்பாலங்களின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென இம் மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
12. இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸை புனரமைப்பு செய்ய வேண்டும்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நலிந்து போய் இயங்கி வருகிறது. 2010ம் ஆண்டு மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் மறு சீரமைப்புக் குழுவின் பரிந்துரைப்படி ரூபாய் 30 கோடியை முதல் பகுதியாக மத்திய அரசு வழங்கியது. ஆனால் 2012 ஆகஸ்டில் நடந்த மத்திய அமைச்சரவையில் மத்திய கனரக அமைச்சர் புனரமைப்பு திட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அறிகிறோம். நீலகிரி மாவட்ட மக்களின் பொருளாதார உயர்வுக்கு வழிவகுக்கும் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தை திட்டமிட்டபடி புனரமைப்பு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசை இம் மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்...

  • அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதற்கு கண்டனம்
  • ஆழியாறு அணைக்கு குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் மத்திய அரசிற்கு கண்டனம்
  • ஏழை மக்களின் முக்கிய உணவான மாட்டு இறைச்சிக்கு இடையூறு செய்வதற்கு கண்டனம்
  • தமிழக நெடுஞ்சாலைகளில் சுங்க வரியைக் குறைக்க வேண்டும் கச்சத் தீவை மீட்க வேண்டும்
  • மீனவர்கள் மீது தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்
  • தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்புக் குள்ளாகி இருக்கும் விவசாயிகளுக்கு குடும்ப நிதியாக ரூபாய் பத்து லட்சம் வழங்க வேண்டும்
  • எல்லை பகுதியில் பதட்டத்தை உருவாக்கும் பாகிஸ்தான் அரசிற்கு கண்டனம்
  • 2010க்கு முன்பாக வாகன உரிமம் எடுத்த அனைவருக்கும் பேட்ஜ் உரிமம் வழங்க வேண்டும்
  • கோவை வெள்ளலூர் பகுதியில் குப்பைக் கிடங்கை அமைக்கக் கூடாது
  • தமிழகத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களை அரசுடமையாக்க வேண்டும்
- ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
Last Updated ( Thursday, 07 February 2013 11:55 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக