puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 11 பிப்ரவரி, 2013

அணிதிரள்வீர் அநீதிக்கு எதிராக...




இந்தியாவில் இருவிதமான நீதிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஒடுக்கப்பட்டோருக்கு ஒரு நீதியும், அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியும் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்சல் குரு தூக்கும், பாபரி மஸ்ஜித் வழக்கில் அத்வானி விடுவிக்கப்பட்டதும் உதாரணமாகக் கூறலாம்.

இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என தீர்ப்பின்படி அப்சல் குரு தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், அப்சல் குருவுக்கு எந்த பயங்கரவாத குழு அல்லது அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாத அக்கிரம செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அந்தக் கொடிய குற்றம் குறித்த விசாரணைகள், தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழிமுறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
நாடாளுமன்றத் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகள் பிடிபடவில்லை. தண்டனையும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்படாத தாக்குதலில் ஈடுபடாத சதிச்செயலில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்படாத அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை நியாயமற்றது. மத்திய அரசின் பாரபட்ச நடவடிக்கையைக் கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமுமுக, மமக மற்றும் சமூகநல ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகள் கலந்துகொள்ளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அநீதிக்கு எதிராக அணிதிரள்வீர்...
Last Updated ( Monday, 11 February 2013 13:29 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக