February 9, 2013 04:07 pm
சிரியாவில் இராணுவ
தொழிற்சாலை மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனம் மோதி தாக்கப்பட்டதில் 55
பேர் பலியாயினர். சிரிய ஜனாதிபதி பஷர்
அல்-ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள், இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஆசாத் பதவி விலகாததால், போராட்டக்காரர்களுக்கு, அமெரிக்கா ஆயுத உதவி அளிக்கிறது. இதனால், சிரியாவில் சண்டை தொடர்கிறது. இதுவரை, 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
ஐந்து லட்சம் பேர், அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். எல்லைபுற நகரங்களை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
இதை மீட்க, அரசு படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.இந்நிலையில், பராக் என்ற இடத்தில், ராணுவ தொழிற்சாலை மீது, வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனம் மோத செய்யப்பட்டதில், அங்கிருந்த தொழிலாளர்கள் உள்பட, 55 பேர் பலியாயினர்.
இரண்டு நாட்களுக்கு முன், இந்த சம்பவம் நடந்ததாக, பிரிட்டனை சேர்ந்த சர்வதேச பார்வையாளர் தெரிவித்து உள்ளார்.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக