puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

இளைஞர்கள் கையில் நாட்டை ஒப்படைத்து, ஒட்டுமொத்தமாக நிர்வாகத்தை மாற்றவேண்டும். ராகுல்காந்தி


21  January  2013   
News at Tamilsource
நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் ஒட்டுமொத்த மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும்,ஊழல் செய்கிறவர்கள், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பேசுவதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்,முதன்முறையாக  இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,"காங்கிரஸ் கட்சி இப்போது எனது வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது.இந்திய மக்கள்தான் என் வாழ்க்கை.இந்திய மக்களின் நலன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக நான் போராடுவேன். இந்தப் போராட்டத்தில் என்னுடன் தோள் கொடுக்க உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

குறிப்பிட்ட சிலர்,அரசியல் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
அதிகாரம் என்பது மையப்படுத்தப்பட்டதாக உள்ளது.கீழ்மட்டம் வரை அதிகாரம் பரவலாக்கப்படவில்லை.தாங்கள் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டு இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.

திறமைக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படாததே இதற்குக் காரணம். பதவிக்கு மட்டுமே மரியாதை கொடுக்கிறோம்.பதவி இல்லையென்றால் ஒன்றுமே இல்லை.டெல்லியில் குவிந்துள்ள அதிகாரத்தை மாநிலங்களுக்கும், கிராம பஞ்சாயத்துகளுக்கும் பரவலாக்க வேண்டும்.

சமீபகாலமாக இளைஞர்கள் கோபமாக உள்ளனர்.இதற்குக் காரணம்,அரசியலிலிருந்து தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதாக அவர்கள் கருதுகிறார்கள்.தங்களுடைய குரல் நசுக்கப்படுவதாக அவர்கள் எண்ணுகின்றனர்.

நீதி,கல்வி,அரசியல்,நிர்வாகம் ஆகிய அனைத்து நடைமுறைகளுமே மக்களுக்கு தொடர்பில்லாத வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஊழல் செய்கிறவர்கள், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள்.நடைமுறை வாழ்வில் பெண்களுக்கு மதிப்பு அளிக்காதவர்கள் பெண்ணுரிமை பற்றி பேசுகிறார்கள்.

வருங்காலத்தில் ஆட்சி,முடிவெடுத்தல்,நிர்வாகம்,அரசியல் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.இவை அனைத்துக்கும் தீர்வு காண வேண்டுமானால்,ஆட்சி நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.இதற்கு இப்போது உள்ள நடைமுறைகளை மறுபரிசீலனை செய்து, முழுவதுமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மாற்றத்தை ஒரே நாளில் ஏற்படுத்திவிட முடியாது.முறையாக திட்டமிட்டு, அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் படிப்படியாக மாற்றத்தைச் செயல்படுத்த வேண்டும்.

தேசிய அளவில் நாட்டை வழிநடத்தும் வகையில் 40 முதல் 50 தலைவர்களை நாம்  தயார்படுத்த வேண்டும். இதுபோல் மாநில அளவில் 5 முதல் 10 தலைவர்களை உருவாக்க வேண்டும். இவர்களில் ஒருவரை முதல்வராக்கலாம்"என்றார்.


thedipaar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக