puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 16 மார்ச், 2013

இலங்கை தமிழர் பிரச்சினை: போராட்டத்தை கைவிட மாணவர்கள் மறுப்பு


இலங்கை தமிழர் பிரச்சினை: போராட்டத்தை கைவிட மாணவர்கள் மறுப்பு
சென்னை, மார்ச்.16-

இலங்கை தமிழர் பிரச்சினையில் அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. உரிமை அமைப்பில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் மாணவர்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் ஈவு இரக்கமின்றி லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. 

அரசியல் கட்சிகளிடையே இருக்கும் பிணக்கு காரணமாக எல்லா கட்சிகளும் தனித்தனி தளத்தில் நின்று போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் ஒன்றுபட்டு தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வில்லை. இதையடுத்து இந்த பிரச்சினையை மாணவர்கள் கையில் எடுத்தனர். 

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர். அவர்களை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வீதிக்கு வந்து போராடினார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும் பாவிகளை எரித்தனர். ஆங்காங்கே பஸ் மறியல், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 20 மாவட்டங்களில் 79-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்பு களைபுறக்கணித்து விட்டு போராட்டத்தில் குதித்தனர். 

சென்னை பாரிமுனையில் டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர்கள், புரசைவாக்கத்தில் அரசு சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருக்கும் மாண வர்கள், அடையாறில் உள்ள அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழக மாணவர்கள், செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புரசைவாக்கம், பாரிமுனை, நந்தனம் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைவது கவலை அளிப்பதாகவும், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது முடிவெடுக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் தெரிவித்தார். 

இருப்பினும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. வருகிற 20-ந்தேதி தமிழகம் முழுவதும் ஒரு கோடி மாணவர்கள் முக்கிய நகரங்களில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்தனர். மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அனைத்து கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டன. விடுதிகளை காலி செய்து விட்டு உடனடியாக வெளியேறும்படி மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. வெளியூர் மாணவ- மாணவிகள் பலர் இரவோடு இரவாக ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள். 

கல்லூரிகள் மூடப்பட்டாலும் போராட்டத்தை கைவிட மறுத்து மாணவர்கள் போராடி வருகிறார்கள். சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 6-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நந்தனம் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் செங்கல்பட்டு, கோவை, சிதம்பரம், கும்ப கோணம் உள்பட பல பகுதிகளில் இன்றும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். 

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனாலும் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக விடுமுறை அறிவிக்கப்பட வில்லை. இன்று பிற்பகலில் விடுமுறை விடப்படலாம் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் மாணவர்கள் பலர் வெளியேறாமல் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக