puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 5 மார்ச், 2013

சேனல் 4 வுக்கு ஆதாரங்கள் வழங்குபவர்கள் யார்? : தேடத்தொடங்கியுள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சு



இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சேனல் 4 தொலைக்காட்சிக்கு வீடியோக்கள், புகைப்பட ஆதாரங்கள்  வழங்குவது யார் என இலங்கை அரசின் புலனாய்வு துறையினர் கடும் தேடுதலில் இறங்கியுள்ளதாக இலங்கையின் சிங்கள ஊடகமான திவயின தெரிவித்துள்ளது.

சேனல் 4 தொலைக்காட்சிக்கு இரகசியமாக வேலை செய்பவர்கள் எவரையும் உங்களுக்கு தெரிந்திருந்தால் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறும், நாட்டுக்கு துரோகம் செய்பவர்களை காட்டிக்கொடுக்குமாறும், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொதுமக்களிடம் ஒரு பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்திருப்பதாகவும் திவயின மேலும் தெரிவித்துள்ளது.

பண லாபத்திற்காக ஒரு சிலர் நாட்டை காட்டிக்கொடுக்கின்றனர் எனவும், அவர்கள் கொடுக்கும் ஆதாரங்களில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டுள்ளதுடன், வெளிநாட்டு ஊடகங்களுக்கு இலங்கையை பற்றி தவறாக கூறுபவர்கள் யாரென தமக்கு தகவல் தருமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சேனல் 4 இன், No Fire Zone டாக்குமெண்டரி அண்மையில் திரைக்கு வந்திருந்ததுடன், அந்நிகழ்வுகளில் உரையாற்றிய இயக்குனர் கேலம் மெக்ரே,  இந்த டாக்குமெண்டரியில் காண்பிக்கப்படும் அனைத்து காட்சிகளும் உண்மையானவை. உண்மைத்தன்மையை பரிசோதிக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களால் நன்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இவை உண்மையான ஆதாரங்கள் என நிரூபிக்கப்பட்ட பின்னரே ஒளிபரப்படுகிறது என கூறியிருந்தார். மேலும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS), பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள், வி.புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பொதுமக்கள்,  போர்க்களத்திலிருந்த இலங்கை இராணுவ வீரர்கள் என அனைவராலும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களே தம்மிடம் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இப்பதிவுகளையும் பார்க்க :

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக