
February
15, 2013 12:10 pm
ஆப்கானிஸ்தான் இராணுவம், முதல் முறையக பெண்களுக்கான
சிறப்புப் படையை உருவாக்கி இராணுவப் பயிற்சி அளித்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் இராணுவத்தில் பல ஆண்டுகளாக பெண்கள்
இடம்பெற்றுள்ள போதும், அவர்களுக்காக சிறப்பு படை இருக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
மிகுந்த
கட்டுப்பாடுகளோடு உள்ள சமூகத்தில், இந்த
மாற்றம் புதிய வளர்ச்சியாகும் என கருதப்படுகின்றது.
இந்தப்
படையினருக்கு இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடுவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த பயிற்சிகள்
வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அமெரிக்காவின் இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து
வெளியேறி வருவதால் ஏற்படும் இராணுவ வீரர்களின் பற்றாக்குறையை இவர்களைக் கொண்டு
சரிகட்ட அரசு தீர்மானித்துள்ளது.
இரவு
ரோந்துகள் மூலமே தலிபான்களின் கமாண்டர்களை பிடிக்க முடியும் என்று அமெரிக்கா
கூறியது. எனவே இரவு ரோந்துப் பணி மிகவும் முக்கியமானதாகும்.
ஆனால்
இரவு ரோந்து நடத்தும்போது, வீடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களை
அமெரிக்க வீரர்கள் சோதனை இடுவதும், புனித
நூலான குரானை தொடுவதும் கலாச்சார மீறலாகக் கருதப்படுகிறது.
எனவே
இதனைத் தவிர்க்க,
அமெரிக்கப் படைகளுடன் பெண்களின் சிறப்புப் படையும் இணைந்து
செயல்பட்டு வருகிறது.
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக