Saturday, 09 February 2013 13:14 administrator
2013
ஆண்டிற்கான கவர்னர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்திலே ராமநாதபுரம
சட்டமன்ற உறுப்பினர் பேரா எம் எச் ஜவாஹிருல்லாஹ் எழுப்பிய வினாவும் அமைச்சர்களின்
பதிலும் (07.02.2013)
ஜவாஹிருல்லா:மாண்புமிகு
பேரவைத் தலைவர் அவர்களே சிறுபான்மையினர் நடத்தும் அரசு நிதி உதவி பெறும்
கல்லூரிகளில் காலியாகவுள்ள பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று இந்த
அவையிலே கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலே அறிவிப்பு வெளியான பிறகும் இந்நாள்வரை
அப்பணியிடங்களை நிரப்பிட அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தத்தை அளிக்கிறது.
அமைச்சர் பழனியப்பன்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே சிறுபான்மையினர் கல்லூரிகளில், 3,120
காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அப்பணியிடங்கள் எந்த வகைகளில் காலியானவை என்பது
குறித்து, மண்டல அளவில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன்
அந்த கல்லூரிகள், சிறுபான்மை தகுதியை தொடர்ந்து தக்க வைத்துள்ளனவா என்பதும் ஆய்வு
செய்யப்பட்டு வருகிறது.
ஜவாஹிருல்லா: மாண்புமிகு
பேரவைத் தலைவர் அவர்களே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 21 ஆயிரம் ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டனர். ஆனால், உருது, தெலுங்கு, மலையாளம் வழி, இடைநிலை ஆசிரியர்கள்
பணியிடங்களை நிரப்ப, தேர்வு பெற்றவர்களுக்கு இன்னும் நியமன உத்தரவு
அளிக்கப்படவில்லை.
அமைச்சர் சிவபதி: மாண்புமிகு
பேரவைத் தலைவர் அவர்களேசிறுபான்மை மொழி ஆசிரியர்களை பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித்
தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட, 69 தெலுங்கு, 21 கன்னடம், 24 உருது மற்றும் ஐந்து
மலையாளம் என, 119 இடைநிலை ஆசிரியர்கள், 70 தெலுங்கு, 20 மலையாளம், ஒன்பது உருது
மற்றும் மூன்று கன்னடம் என, 102 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு
உள்ளனர்.முதுகலை ஆசிரியர்கள், 20 பேருக்கான பட்டியல், அடுத்த மூன்று தினங்களில்,
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் விரைவில்
அவர்களும்
பணியமர்த்தப்படுவர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக